செவ்வாய், 18 பிப்ரவரி, 2014

பள்ளியில் டவர் வைக்கலாமா...?




பள்ளியில் டவர்

பள்ளிவாசல் நிர்வாக்க்குழு நடந்து கொண்டிருந்தது...

அடுத்து என்றார் தலைவர்.

“நம்ம பள்ளி மாடியில் செல்போன் டவர் கட்ட அனுமதி கேட்கிறாங்க. நல்ல தொகை வாடகையா கிடைக்கும். அனுமதி கொடுக்கலாமா?“

அனுமதி கொடுக்கிறதுக்கு முன்னாடி மார்க்கம் இதை அனுமதிக்கிறதான்னு தெரியணும்.

உறுப்பினர் ஒருவர் முன்மொழிய மற்றவர்களும் வழிமொழிந்தனர்.

அப்ப நம்ம இமாம்கிட்ட கேட்டிரலாம் சொன்ன தலைவர் செல்போனில் இமாமை அழைத்தார்.

இரண்டு நிமிடத்தில் வந்து சேர்ந்த இமாம் அவர்களிடைய பேசினார்.

“பள்ளி மாடிக்கும் பள்ளி சட்டமே.எனவே அதன் கன்னியம் பேணப்பட வேண்டும்.
தேவையின்றி மாடிக்குச் செல்வது மக்ரூஹ்.

எனினும் பள்ளி வருமானத்திற்காக ஹவ்ழ் கழிப்பறை இவைகளின் மேலே கட்டிக் கொள்ளலாம்“ என்றார்.

     (ஃபதாவா, ஆலம்கீரி ,பாகம் -5 பக்கம் 322)

நிர்வாகம் இமாமுக்கு நன்றி சொன்னது. கழிப்பறை மேலே டவர் கட்ட அனுமதியளிப்பது என தீர்மானம் நிறைவேற்றி துஆவுடன் கூட்டம் கலைந்தது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக