திங்கள், 21 நவம்பர், 2016

               அழகு



எரிவதில் தீபம் அழகானது.......!!!


         

 சுடுவதில் சூரியன் அழகானது.......!!!

         


சுற்றுவதில் புவி அழகானது.......!!!

         



 வளர்வதில் பிறை அழகானது.......!!!

           


 மின்னுவதில் விண்மீன் அழகானது........!!!

            



 தவழ்வதில் குழந்தை அழகானது........!!!
            
               


 நடப்பதில் நதி அழகானது.......!!!

            


குதிப்பதில் கடல் நீர் அழகானது......!!!

                 



விழுவதில்அருவி அழகானது..........!!!

                 


 உறைவதில் பனி அழகானது........!!!

                 


 விளைவதில் பயிர்கள் அழகானது.......!!!


தலை சாய்ப்பதில் நெற்கதிர் அழகானது......!!!

             


குளிர்ச்சியில் தென்றல் அழகானது........!!!

                 

உழைப்பதில் வியர்வை அழகாய்........!!!

             



 பாடுவதில் குயில் அழகானது.........!!!

                 


 பறப்பதில் புறா அழகானது........!!!

                                   

காதலில் புரிதல் அழகானது........!!!

           


 உறவினில் நட்பு அழகானது........!!!

                 


 மொழிகளில் மழலை மொழி அழகானது.......!!!

             


இத்தனைக்கும் இதற்கு மேலேயும்.......
 எப்போதும் தாய்மை அழகானது........!!!

              


இதை உணர்ந்த அத்தனை உள்ளங்களும் அழகானது.......!!!

                   

 இதைவிட வேறு என்ன வேண்டும் வாழ்வில்.....???
 குறை ஒன்றும் இல்லையே........!!!

                  



இவ்வளவு அழகான வாழ்க்கையை தந்த அல்லாஹ்வை நன்றி மறவா இருப்போம்.


                           

ஞாயிறு, 20 நவம்பர், 2016





மனித நேயம்



போகும் வழியில் ஒரு மின்கம்பத்தில் ஒரு சிறு துண்டு காகிதம் எழுதி தொங்க விட பட்டிருந்தது. அப்படி என்னதான் அதில் எழுதியிருக்கு என்ற ஆர்வத்தில் நானும் போய் படித்தேன். 

அதில் " என்னுடைய 50 ரூபாய் தொலைந்து விட்டது. யார் கைலாவது கிடைத்தால் தயவுது செய்து இந்த விலாசத்தில் தருமாறு கேட்டு கொள்கிறேன். எனக்கு கண் பார்வை அவ்வளவு சரியில்லை" என்று விலாசத்துடன் எழுதியிருந்தது. 

எனக்கும் பொழுது போகவில்லை, அந்த குறுக்கு வழியில் பார்த்த ஒரு நபரிடம் விலாசம் கூறி வழி கேட்டேன். "இந்த அம்மாவா, கொஞ்சம் தூரம் போனால் ஓர் பழைய வீடு இருக்கும். அங்க தான் அந்த கண் தெரியாத அம்மா இருக்கு" 

                                

அங்கே ஓர் சிறிய கீத்து .கொட்டகை. ஒரு நாள் மழைக்கு கூட தாங்காது. வெளியில் , கண்கள் குழி விழுந்து, எலும்பும் தோலுமாக வயதான ஓர் அம்மா . 





என் காலடி சத்தம் கேட்டதும், யாருப்பா நீ? அம்மா நான் இந்த வழியாக வந்தேன், எனக்கு 50 ரூபா கீழே விழுந்து கிடைத்தது. 

                             
அது உங்களிடம் தரலாம் என்று வந்தேன். கேட்டதும் அந்த அம்மா அழ ஆரம்பித்து விட்டார். தம்பி ரெண்டு நாளா கிட்டத்தட்ட முப்பது முப்பத்தஞ்சு பேர் வந்து 50 ரூபா கீழே விழுந்து கிடைச்சது என்று சொல்லி குடுத்துட்டு போறாங்க.. அந்த கடிதம் நான் எழுதவில்லை.எனக்கு எழுத படிக்க தெரியாது. பரவாயில்ல அம்மா நீங்க வச்சிக்கிங்க என்று சொல்லி கொடுத்து திரும்பினேன். தம்பி நீ போகும் போது மின்கம்பத்தில் இருக்கும் அந்த கடிதத்தே மறக்காமல் கிழித்து போட்டு விடு என்று அறிவுரைத்தாள் அந்த தாய். 

என் மனதில் வித விதமான எண்ணங்கள். யார் அந்த கடிதத்தை எழுதி இருப்பார். அந்த கடித்ததே கிழித்து விடு என்று அந்த அம்மா ஒவொருவரிடமும் கூறி கொண்டுதான் இருப்பார். ஆனால் யாரும் அப்படி செய்யவில்லை. யாரும் இல்லாமல் அனாதையாக வாழும் ஓர் உயிருக்கு கடித வடிவில் உதவி செய்த அந்த நண்பருக்கு மனத்தால் நன்றி சொல்லி கொண்டேன். நன்மை செய்யவேண்டும் என்ற மனம் இருந்தால் அதற்க்கு ஆயிரம் வழி. 

மனதில் யோசித்து கொண்டே வரும்போது வழியில் ஒருவர் என்னிடம். " அண்ணே இந்த விலாசம் எங்கே என்று சொல்ல முடியுமா? கீழே இருந்து 50 ரூபாய் கிடைத்தது. அந்த அம்மா கிட்டே குடுக்கணும். வழி சொல்றீங்களா? 

மனித நேயம் சாகவில்லை.

திங்கள், 14 நவம்பர், 2016


ஸலாம் கூறுங்கள் சொர்க்கத்தில் நுழையுங்கள்





ஸலாம் கூறுவது மூலம் சொர்க்கத்தில் நுழையுங்கள்என்ற நபிகளாரின் பொன்மொழி, ஸலாத்தின் சிறப்பைமேன்மையைப் போற்றும் மொழியாகும்.

மனிதர்களுக்கு இடையே நேசத்தைபிரியத்தை வளர்க்கும் ஆயுதம் ஸலாம்’.

ஸலாம் சொல்வதில் ஒரு ஒழுங்கு முறை உள்ளது. வாகனத்தில் செல்பவர் நடந்து செல்பவருக்கும், நடந்து செல்பவர் அமர்ந்து இருப்பவர்களுக்கும், சிறு கூட்டத்தினர் பெருங்கூட்டத்தினருக்கும், சிறுவர்கள் பெரியவர்களுக்கும் ஸலாம் கூற வேண்டும். இது ஒழுக்கத்தையும் பணிவையும் எடுத்துக்காட்டும் வகையில் கூறப்பட்ட ஒரு மரபாகும். இதற்கு மாறாக மற்றவர்கள் முதலில் ஸலாம் கூறினாலும் அதில் தவறேதும் இல்லை.


வாகனத்தில் செல்பவர், நடப்பவருக்கு ஸலாம் கூறும்போது, நடப்பவருக்கு அவரைப்பற்றி உண்டான அச்சம், பயம் நீங்கி விடும். வாகனத்தில் உள்ளவர் ஸலாம் கூறும்போது, நடப்பவரை விட நாம்தான் உயர்ந்தவர் என்ற கர்வம் ஏற்படாது. மாறாகப் பணிவு ஏற்படும். எண்ணிக்கையில் அதிகமானவர்களின் உரிமை அதிகமானதால், எண்ணிக்கையில் குறைவானவர்கள் அவர்களுக்கு ஸலாம் கூற வேண்டும்.

ஒருவரையொருவர் சந்திக்கும்போது ஸலாம்கூறுவதைப் போன்றே, கரம் பற்றி வாழ்த்து தெரிவிப்பதும் நபி வழியாகும். இதை முஸாபஹாஎன்பர். ஒருவரின் கை மற்றவரின் கையுடன் சேர்வதை இது குறிக்கும்.

இதில் இரு கைகளையும் பற்றி வாழ்த்து தெரிவிப்பதே சிறந்த முறையாகும். நபித் தோழர்கள் ஒருவரையொருவர் சந்தித்துக் கொள்ளும்போது கரம் பற்றி முஸாபஹாசெய்வார்கள். பயணத்தில் இருந்து வந்தால் கட்டித் தழுவிக் கொள்வார்கள்என்று அனஸ் (ரலி) அவர்கள் அறிவித்துள்ளார்கள்.


ஒரு வீட்டுக்குச் சென்றவுடன் உள்ளே நுழைவதற்கு முன்பு முதலில் ஸலாம் கூற வேண்டும். பிறகு உள்ளே செல்ல அனுமதி பெற வேண்டும்.

நம்பிக்கையாளர்களே! உங்களுடையது அல்லாத வீடுகளில் நீங்கள் (நுழையக் கருதினால்) அதில் இருப்பவர்களுக்கு ஸலாம் கூறி (அவர்களுடைய) அனுமதியைப் பெறும் வரையில் நுழையாதீர்கள். இவ்வாறு நடந்து கொள்வது உங்களுக்கே மிக்க நன்று. (இதனை மறந்து விடாது நீங்கள் கவனத்தில் வைப்பீர்களாக)’ (திருக்குர்ஆன்–24: 27) என்று இறைவன் திருமறையில் கூறுகின்றான்.


ஒரு வீட்டுக்குச் சென்று அனுமதி கோரி கதவைத் தட்டும்போது உள்ளே இருப்பவர், ‘வந்திருப்பது யார்?’ என்று வினவினால், ‘நான்தான்என்று கூறக் கூடாது. தான் இன்னார் என்பதை வீட்டில் உள்ளவர்கள் புரிந்து கொள்ளும் வகையில் பெயர், ஊர் போன்றவற்றைத் தெளிவாகக் கூற வேண்டும்.

முஸ்லிம்கள் நாள்தோறும் நடைமுறைப்படுத்துகின்ற அஸ்ஸலாமு அலைக்கும்என்ற வாழ்த்துச் சொல், ஆழமான அர்த்தங்களைக் கொண்டது.

இந்த வாழ்த்துச் சொல்லை எல்லா நேரங்களிலும், எல்லா இடங்களிலும் சொல்லலாம்.

‘‘
உங்கள் மீது சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக’’ என்ற இந்தச் சொல்லை மகிழ்ச்சியாக இருப்பவர்களிடமும் கூறலாம். சோகமாக இருப்பவர்களிடமும் சொல்லலாம்.

திருமண வீடுகளிலும் சொல்லலாம்; துக்க வீடுகளிலும் மொழியலாம். ஏனெனில் எல்லோருக்குமே சாந்தியும், சமாதானமும் தேவையானது. நிம்மதியும், அமைதியும் அனைவருக்கும் அவசியமானது.

இந்த வாழ்த்தைக் காலையிலும் கூறலாம்; மாலையிலும் கூறலாம்; இரவிலும் கூறலாம்.


ஆங்கில நடைமுறையான குட் மார்னிங்’ (நல்ல காலைப் பொழுது) என்பதை மாலையிலோ இரவிலோ சொல்ல முடியாது. சோகமான இடங்களில் சொல்லக் கூடாது.

சோகமாக இருக்கும் ஒருவரிடம், ‘நல்ல காலைப் பொழுதுஎன்று சொல்வது நல்லதல்ல.

மேலும், பெரியவர்கள் சிறியவர்களுக்கும், சிறியவர்கள் பெரியவர்களுக்கும்ஸலாம்கூறலாம். ஆசிரியர்கள் மாணவர்களுக்கும், மாணவர்கள் ஆசிரியர்களுக்கும் ஸலாம்சொல்லலாம். தலைவர்கள் தொண்டர்களுக்கும், தொண்டர்கள் தலைவர்களுக்கும் கூறலாம். பணக்காரர்கள் ஏழைகளுக்கும், ஏழைகள் பணக்காரர்களுக்கும் ஸலாம்சொல்லலாம்.

வணக்கம், வந்தனம், நமஸ்தே, நமஸ்காரம் போன்ற வாழ்த்துச் சொற்கள், வணங்குகிறேன் என்ற பொருளில் வழங்கப்படுகின்றன. இதோடு ஒப்பிடுகையில் இஸ்லாமியர்களின் அஸ்ஸலாமு அலைக்கும்என்ற வாழ்த்துச் சொல் ஒப்பற்றது. அனைவரின் கவுரவத்தையும், மரியாதையையும் பேணுகின்ற வகையில் அமைந்துள்ளது.

உங்கள் மீது சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக; இன்னும் இறைவனின் அருளும் அவனது நிரந்தரமான அபிவிருத்தியும் உண்டாகட்டும்என்று ஒருவருக்காக மற்றொருவர் வாழ்த்துவதும், இறைவனிடம் பிரார்த்திப்பதும் போன்ற அடிப்படையில் அமைந்திருக்கிற இந்த வாழ்த்து இஸ்லாத்தின் தனிச்சிறப்பாகும்.

இதில் இன்னொரு மகத்தான மகத்துவமும் உள்ளது. பிற மதங்களில் ஏழைகள், பணக்காரர்களுக்கும், தொழிலாளர்கள், தொழில் அதிபர்களுக்கும் வாழ்த்து கூறுகின்ற நடைமுறை உள்ளது. ஆனால் முஸ்லிம்களுக் கிடையே இதில் நேர்மாறான நிலை காணப்படுகிறது. கோடீஸ்வரர்கள்கூட, சாதாரணமானவர்களைக் கண்டதும் ஸலாம்சொல்ல முந்திக் கொள்வதைக் காணலாம்.

முஸ்லிம்களுக்கிடையே ஸலாம் சொல்வதில் முந்திக் கொள்ளுங்கள்என்று நபிகளார் சொல்லி இருப்பதே இதற்குக் காரணமாகும்.

முதலில் ஸலாம் கூறுபவரே இறைவனுக்கு வழிபட்டு அவனை நெருங்குவதற்கு மக்களில் மிகவும் தகுதியானவர்என்பது நபிகளாரின் கூற்று.


ஸலாம் கூறுவோம்....! சொர்க்கம் செல்லுவோம்..!