அல்லாஹ், வானவர், வேதம், நபிமார்கள், மறுமைநாள், விதி
ஆகிய ஆறின் மீதும் முழுமையான நம்பிக்கை கொள்வது ஒவ்வொரு முஸ்லிம்; மீதுள்ள
கடமையாகும். இதில் ஒன்றை நம்பி, ஒன்றை எற்க மறுத்தாலும் ஒருவன் இறை நம்பிக்கையாளனாக
முடியாது.
இந்த ஆறின் மீதும் முழுமையான நம்பிக்கை உள்ள ஒருவனே
இறை நம்பிக்கையானன் என்ற பெயர் பெறலாம். இஸ்லாம் எனும் வட்டத்திற்குள் இருக்கலாம்.
இதில் எந்த ஒன்றை மறுத்தாலும் அவன் 'இறை நம்பிக்கையாளன் இல்லை' என
இஸ்லாம் அறிவிக்கிறது.
மக்காவில் வாழ்ந்த இணைவைப்போர், அல்லாஹ்வை
நம்பி இருந்தனர். இறை மறுப்பாளர்கள், நரகத்திற்குரியவர்கள்
என அறிவிக்கப்பட்ட அபூஜஹல், அபூலஹப், உத்பா, ஷைபா போன்றோர் 'அல்லாஹ்'வையும்
கடவுள் என நம்பினர் என்பதை திருக்குர்ஆன் மூலமே நாம் அறியமுடிகிறது.
அவர்களைப் படைத்தது யார்? என அவர்களிடம் நீர் கேட்டால் 'அல்லாஹ்' என்று தான் கூறுவார்கள்... (அல்குர்ஆன்
43:87)
வானங்களையும், பூமியையும் படைத்தது யார்? ஏன அவர்களிடம் நீர் கேட்டால், 'அல்லாஹ்' என்று தான் பதில் கூறுவார்கள்.. (அல்குர்ஆன்
31:25)
வானங்களையும், பூமியையும் படைத்து, சந்திரனையும், சூரியனையும் தன்
கட்டுப்பாட்டில் வைத்திருப்பவன் யார்? என்று அவர்களிடம் நீர் கேட்டால், 'அல்லாஹ்தான்' என பதில் கூறுவார்கள்.. (அல்குர்ஆன்
29:61).
வானிலிருந்து மழையைப் பொழியச் செய்து, காய்ந்த
பூமியை உயிர்ப்பித்(து விளையச் செய்)தவன் யார்? என்று
அவர்களிடம் நீர் கேட்டால் 'அல்லாஹ்தான்' என்று
பதில் கூறுவார்கள் .. (அல்குர்ஆன் 29:63).
அல்லாஹ்வை நம்பியிருந்தனர் மக்காவாசிகள். ஆனாலும்
அவர்களில் பலர் 'இறை மறுப்பாளர்கள்' என
அறிவிக்கபட்டனர். காரணம், அவர்கள் கொண்ட நம்பிக்கையில் உள்ள குறைபாடுதான். அல்லாஹ்வை
நம்பினார்களே தவிர, அல்லாஹ்வுக்கு எதையும் இணைவைக்கக்கூடாது என்ற உண்மையை
மறந்து விட்டனர். விளைவு! 'இறைமறுபாளர்கள்' 'நரகத்திற்குரியவர்' என்று
அறிவிக்கப்பட்டனர். எனவே ஈமான் எனும் நம்பிக்கை முழுமை பெற்றதாக அமைய வேண்டும்.
நம்பிக்கை கொள்ளப்பட வேண்டிய 'மறுமைநாள்' பற்றிய
எச்சரிக்கை திருமறைக் குர்ஆன் நெடுகிலும் உள்ளது. இறைமறுப்பாளர்கள், இணை
வைப்பேர் இதை நம்பிக்கை கொள்வதில் குறை வைத்துவிட்டனர் என்பது பெரிய ஆச்சரியம்
அல்ல. ஆனால் முஸ்லிம்களும் கூட இதில் முழு நம்பிக்கை இல்லாவர்களாக உள்னர் என்று
கருதும் அளவுக்கே வாழ்கின்றனர்.
மறுமை நாள் மீதான நம்பிக்கை அவசியமானது. கட்டாயமானது
என ஒரு சிலர் விளங்கி இருந்தாலும், அதற்காக
தங்களை தயார் படுத்திக் கொள்வதும் இல்லை. 'எப்போதோ வரும் ஒன்று, இப்போதே
நாம் ஏன் அலட்டிக் கொள்ள வேண்டும்?' என்ற
எண்ணம் மேலோங்கியதே இதற்குக் காரணமாகும்.
ஒரு சிலர் இஸ்லாமியச் சட்டங்களை பின்பற்றுதில் அல்லது
அதை நம்புவதில் முழு ஈடுபாட்டைக் காட்டினாலும், மறுமை
நம்பிக்கை மீது மட்டும் ஏனோ தானோவென்றே உள்ளனர். இதனால் தங்களின் ஈமானை இழந்து
கொண்டிருக்கிறோம் என்பதை அவர்கள் உணர்வதில்லை.
அல்லாஹ்வை நம்புங்கள் என்று வலியுறுத்திய நபி (ஸல்)
அவர்கள் அதே அளவிற்கு 'மறுமையை நம்புங்கள்' என்றும்
வலியுறுத்தினார்கள். 'இவ்வுலகத்துடன் நம் வாழ்வு முடிந்திடவில்லை, மரணத்திற்குப்பின்
பின் இன்னுமொரு வாழ்வு உண்டு' என்ற உண்மையை நபி (ஸல்) அவர்கள் போதித்துக் கொண்டே
இருந்தார்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக