புதன், 26 பிப்ரவரி, 2014

சிறுநீரகக்கல்லுக்கு தீர்வு



ஓர் அனுபவ வைத்தியம்: முகநுாலில் படித்தது

-----------------------------
ரூ.10ல் சிறுநீரகக்கல்லுக்கு தீர்வு..!



நான் மருத்துவம் படித்த மருத்துவர் அல்ல. எனது 



அனுபவத்தில் நான் மேற்கொண்ட, பலனைத்தந்த 

வீட்டுச் சிகிச்சையை எழுதியிருக்கிறேன்....


இன்றைய உணவுப்பழக்கத்தினால், சிறுநீரக கல் 


பிரச்சினை என்பது பெரும்பாலானவர்களுக்கு 

சாதாரணமாகிவிட்டது.



எனவே google இல் ஒரு மணி நேரத்தேடலுக்குப் 


பிறகு, சிகிச்சை பெற்ற

ஒரு புண்ணியவான் அந்த காய்கறி பெயர்+ 



திரவத்தின் பெயரை வெளியிட்டிருந்தார்



அந்த காய்கறியின் பெயர் ஃபிரஞ்சு பீன்ஸ்(French


 beans) , திரவத்தின் பெயர் தண்ணீர் (அட வீட்ல 

நாம தினமும் குடிப்பது தான்).


( ¼ ) கால் கிலோ ஃபிரஞ்சு பீன்ஸ் ( எல்லா 


கடைகளிலும் கிடைக்கிறது ) `ரூ10-க்கு வாங்கி, 

விதை நீக்கி, தண்ணீரில் கொதிக்க வைத்து 

(குறைந்தது 2

மணிநேரம்), மிக்ஸியில் நன்றாக அரைத்து குடித்து


 விட்டு, 10 நிமிடம் கழித்து, 2 லிட்டர் நீரை ( ஒரே 

முறையில் குடிக்க முடியவில்லையென்றால்


சிறிது நேரம் விட்டு விட்டு) குடிக்க வேண்டும், 


இன்னும் அதிகமாக குடிக்க


முடிந்தால் நலம்.



நான் இதை குடித்தவுடன் (மாலை 5 மனிக்கு) , 


விடியற்காலை 3 ½ மணிக்கு (அதுவரை அடிக்க


டி நீர் அருந்திகொண்டிருந்தேன், வலியில் எங்கே 

தூங்குவது...) 5 சிறு கற்களாக சிறுநீர்போகும்போது 

வெளிவந்தது.

கல்லானது சிறுநீரகத்திலிருந்து சிறு பைப் வழியாக


 சிறுநீர்பைக்கு சென்றடைகிறவரையிலும் வலி 

கொடுமையானதாக இருக்கும், அதன் பின் சிறுநீர் 

பையிலிருந்து வெளி வருகிறவரை, சிறுநீர் 

பாதையை அடைத்துக் கொண்டு, சிறுநீர் வரும்.. 

ஆனால் வராது... என்ற கதையாகிவிடும்,

பயந்துவிடாமல், நாம் பருகும் நீரின் அளவை 


அதிகரிக்க வேண்டும், சிறுநீர்பை நிறைந்து சிறுநீர் 

கழிப்பது கட்டுபடுத்தாத நிலைவரும்,

அப்போது, நாம் அதிக அழுத்ததுடன் 


சிறுநீர்கழித்தால் , வெளியே வந்துவிடும். கற்கள் 

ஒரு ஸேப் (SHAPE) இல்லாமல் இருப்பதால், 

உள்பாதையில் கிழித்து

ரத்தமும் வரலாம், ஒரு நாளில் சரியாகிவிடும்.

மறுநாள் எடுதத ஸ்கேனில் கற்கள் 


இல்லையென்று ரிப்போர்ட் வந்தது.

அதிலிருந்து வாரம் ஒருமுறை 


இதை சாப்பிடுகிறேன், எனக்கு கல் பிரச்சினை

போயே போயிந்தி.. இட்ஸ் கான்...


இனிமேல் கல் உருவாகாமல் 


பார்த்துக்கொள்ளலாம். தினமும் 3 லிட்டர் 

வரையிலும் தண்ணீர் குடித்து விடுங்கள்.



சிறுநீரக்கல் வலி வந்த பிறகு அது தொடர்பாகநான் 


இணையதலத்தில் படித்ததில் சில :


துளசி இலை(basil) : இந்த இலையின் சாருடன் 


, தேன் கலந்து ஆறு நாட்கள் உண்டால், கல் 

உடந்து 

விடுமாம்.( கல்வலி வந்த பிறகு ஆறு நட்கள் 

என்பது மிக அதிகமான காலம், அதனால், இதை

 நாம் கல்உருவாவதை தடுக்கும் 

முன்னெச்சரிக்கைக்காக அருந்தலாம்)

ஆப்பிள்(Apple) : அடிக்கடி சாப்பிட்டாலும் கல் 


உருவாகாதாம்.

திராட்சை ( Grapes) : இதில் உள்ள, நீரும், 



பொடாசியம் உப்பும், கல் உருவாகுவதை 

தடுக்குமாம். மேலும் இந்த பழத்தில் உள்ள 

ஆல்புமின் மற்றும் சோடியம் குளோரைடு கல் 

பிரச்சினக்கு நல்ல தீர்வாக இருக்குமாம்.


மாதுளம் பழம்(pomegranate ): இந்த பழத்தின் 

விதையைப் பிழிந்து, ஒரு டேபில் ஸ்பூன் அளவு 

எடுத்து, அதனுடன் 2 ஸ்பூன் கொள்ளு சாருடன்(


குதிரைக்கு பிடித்தது..!!) சேர்த்து சாப்பிட்டால் , கல் 

பிரச்சினை தீருமாம்.
அத்திப்பழம்(Figs) : இந்த பழத்தை, நீரில் கொதிக்க 



வைத்து வடிகட்டி, ஒரு மாதம் தொடர்ந்து, 

காலையில் காலி வயிற்றில், பருகினால் பலன் 

தருமாம்.

தண்ணீர்பழம்(water melon ): நீரின் அளவு அதிகம் 


உள்ள பழம், பொட்டாசியம் உப்பின் அளவும் 

அதிகமாம், அதிகம் உண்பதால் கல் பிரச்சினை 

தீருமாம்.

இளநீர் : இளநீர் அதிக அளவு சேர்த்துக் 


கொல்வதாலும் கல் உருவாவதை தடுக்கலாமாம்.
வாழைத்தண்டு ஜூஸ் : வாழைத்தண்டு ஜூசுக்கு 


கல் உருவாவதை + கல் உருவானதை 

உடைக்கும்(diffuse) திரன் உள்ளதாம்.


மேற்சொன்னதை எவ்வளவு உட்கொண்டாலும், 


குடிக்கும் தண்ணீரின் அளவு (தினமும் 2 

லிட்டரிலிருந்து 3 லிட்டர் வரை) குறைந்தால் கல் 

உருவாவது நிச்சயம் என்கிறார்கள்.

பின் குறிப்பு 1 : கல் ஏற்பட்ட பின் வலியை 


பொருக்கமுடியாதவர்கள் மருத்துவரிடம் 

சென்றுவிடுவதே நல்லது.

பின் குறிப்பு 2 : இந்த முறையில் பக்க 


விளைவுகளுக்கு சாத்தியமே இல்லையென்பதால், 

தைரியமாக பின்பற்றலாம். இதுவரை கல் 

பிரச்சினை வராதவர்களும் பின்பற்றலாம்.



நன்றி முகநுால்

செவ்வாய், 25 பிப்ரவரி, 2014

தாழ்வு மனப்பான்மை



தாழ்வு மனப்பான்மையை போக்க சில வழிகள்..

1. நீங்கள் அழகு என்பதை முதலில் நீங்கள் நம்புங்கள். நிறத்திற்கும் அழகிற்கும் சம்பந்தமில்லை என்பதை ஏற்றுகொள்ளுங்கள். யாரும் சொன்னாலும் ரசித்தாலும் தான், நான் அழகு என்று நினைப்பதை நிறுத்துங்கள். உங்களை நீங்களே ரசியுங்கள்.

2. எந்த மொழி சரளமாக பேச முடியவில்லை என்றாலும் கவலை கொள்ளாதீர்கள். உங்களை நக்கல் செய்பவரிடம் துணிச்சலாய் எதிர்த்துத் சொல்லுங்கள் இங்கு பலருக்கு அவரவர் தாய் மொழியையே சரியாகப் பேசத் தெரியாதென்று.

3. உங்களால் எது முடியாது. உங்களுக்கு எது தெரியவில்லை என்று யாரேனும் சொன்னாலும், அதை விரைவில் கற்றுக் கொண்டு முடித்துக் காட்ட வெறித் தனமாய் முயற்சி செய்யுங்கள்.

4. என் வாழ்க்கை சோகம் நிறைந்தது என்று நினைக்காதீர்கள். எல்லாம் நிறைவாய் இருக்கும் வாழ்க்கை இங்கு யாருக்குமே அமைவதில்லை என்பதே உண்மை. 

5. உங்களுக்கு எதுவும் தெரியாது. எதிரில் நிற்பவருக்கு எல்லாமே தெரியும் என்று ஒரு போதும் நினைக்காதீர்கள். இந்த எண்ணம் இருந்தால் நீங்கள் சொல்ல வந்ததை சரியாக தடுமாற்றம் இன்றி சொல்லி முடிக்க முடியாது.

6. கேள்வி கேட்பதற்கும் உங்களை முன் நிறுத்துவதற்கும் மொழி புலமை அவசியம் என்று நினைக்காதீர்கள். உலகில் சரியாக சிந்திக்க வைத்த கேள்விகளை கேட்ட நிறையப் பேர் மொழிப்புலமை இல்லாமல் தங்களுக்கு தெரிந்த வார்த்தைகளைக் கொண்டு தங்கள் கேள்விகளை சரியாக புரியவைத்தவர்கள்.

7. அழும் போது தனியாக அழுங்கள். நீங்கள் அழைத்தாலும் சேர்ந்து அழ இங்கு யாரும் வரப்போவதில்லை என்பதை ஏற்றுக் கொள்ளுங்கள். கண்ணீரில் துக்கத்தை கரைத்து தூர எறிந்து விட்டு முன் செல்லுங்கள்.
8. உங்கள் அன்பு எந்த இடத்தில் நிராகரிப்பட்டாலும் இழப்பு உங்களுக்கில்லை, நிராகரித்த்வருக்கே என்பதை புரிந்துக் கொள்ளுங்கள்.


திங்கள், 24 பிப்ரவரி, 2014

நம்பிக்கை தான் வாழ்க்கை



நடைபாதை...ஓர் இளைஞன். கையில் பாட்டில்.

”இது சுறுசுறுப்பு டானிக்… காலையில் ஒரு ஸ்பூன்… மாலையில் ஒரு ஸ்பூன் சாப்பிட்டால் போதும்… நாள் பூராவும் சுறுசுறுப்பு கிடைக்கும்!” என்று கூவி விற்றான்.

நிறைய பேர் வந்தார்கள். வாங்கினார்கள்… சாப்பிட்டார்கள்…

சுறுசுறுப்பாகத்தான் இருந்தது. கொடுத்த காசு வீண் இல்லை. மருந்து தீர்ந்ததும் மறுபடியும் அந்த வியாபாரியைத் தேடினார்கள். கிடைக்கவில்லை.

இரண்டு ஆண்டுகள் கழித்து… அதே வியாபாரி பலூன் விற்றுக் கொண்டிருந்தான்.

“அடடா! உங்களை எங்கேயெல்லாம் தேடுவது… அந்த சுறுசுறுப்பு டானிக் இன்னும் தேவை… எங்கே இருந்தீர்கள் இதுவரைக்கும்….?”

”சிறையிலே இருந்தேன்!”

”ஏன்?”

”போலி மருந்து விற்பனை பண்ணினதுக்காக இரண்டு வருடம் தண்டனை!”

”உங்க மருந்து போலி மருந்தா? யார் சொன்னது அப்படி? உங்க மருந்தை சாப்பிட்டு நான் சுறுசுறுப்பு பெற்றது உண்மை!”

”அப்படி இல்லே! நான் வெறும் தண்ணியிலே உப்பு, மிளகு, சீரகம், வெந்தயத்தைப் பொடி பண்ணி கலந்து வித்தேன்.”

”அப்படின்னா… எங்களுக்கு சுறுசுறுப்பு கொடுத்தது…?”

"அது உங்கள் நம்பிக்கை! நம்பிக்கை தான் வாழ்க்கையின் உந்து சக்தி, மருந்து மாத்திரை அல்ல‌!


சூப்பர் தகவல்....



தெரிந்து கொள்ளுங்கள்...


1.உலகிலேயே அதிகம் பேருக்கு இருக்கும் பெயர் "முஹம்மது" 

2. உடலின் மிக வலிமையான சதைப்பகுதி "நாக்கு" 

3. ஆங்கில கீபோர்டில் ஒரேவரிசையில் அதிக எழுத்துக்கள் பயன்படுத்தப்படும் ஒரு சொல் "TYPEWRITER" 

4. அதே போன்று இடது கையினால் மட்டும் டைப் செய்யப்படும்
நீண்ட வார்த்தை 'Stewardesses" 

5. உலகில் மனிதர்கள் அதிகமாக இறப்பதற்கு காரணமாகும் ஜீவராசி - ”கொசு”

6. Sixth Sick Sheik's Sixth Sheep's Sick - இதுவே ஆங்கிலத்தில் மிகவும் கடினமான "Tongue Twister"

7. 111,111,111 ஐ திரும்ப 111,111,111 ஆல் (111,111,111 x 111,111,111) பெருக்கினால்
12,345,678,987,654,321 என்ற விந்தையான கூட்டுத்தொகை வரும்.

8. எப்போதும் கெட்டுப்போகாத ஒரே உணவு "தேன்"

9. தீப்பெட்டி கண்டுபிடிப்பதற்கு முன்பே சிகரெட் லைட்டர் கண்டுபிடிக்கப்பட்டது.

10. வானத்தை நிமிர்ந்து பார்க்க இயலாத ஒரே விலங்கு "பன்றி" 

11. உண்மையில் தும்மும் போது இதயம் ஒரு 'மில்லி செகண்ட்' நிற்குதாம்.

12. பூமியின் எடை 5,972,000,000,000,000,000,000 டன்கள்.



கோபம் தவிருங்கள்




கோபம் வந்தால் என்ன செய்ய வேண்டும்...?


இந்த கோபம் வந்தால் நாம் எப்படி அடக்குவது...??? அல்லது இந்த கோபத்தை கட்டுப்படுத்துவதற்க்கு என்னதான் செய்யலாம் என யோசிக்கிறீர்களா..??? அதற்கு பலவழிகள் உண்டு. இதை ஆண், பெண் கடைபிடிக்கலாம். அவை 

* கோபம் வரும் போது தண்ணீர் குடியுங்கள். 

* சிறிது நேரம் மெளனமாக இருங்கள்.

* முகத்தை கழுவுங்கள். அல்லது குளிர்ந்த நீரில் குளியுங்கள்.

* பொறுமையாக இருங்கள். அவசரப்படாதீர்கள்.

* அந்த இடத்தை விட்டு வெளியில் செல்லுங்கள்.

* கோபம் வருகிற சூழ்நிலைகளில் அதிகம் பேசாதீர்கள்.

* சுய கட்டுப்பாட்டை கடைப்பிடித்து மனதை ஒருநிலைப்படுத்துங்கள்.

* செய்யும் வேலையை நேசத்துடனும், நேர்மையுடனும் செய்யுங்கள்.

* உங்களுக்கு தெரிந்த வேத மந்திரங்களை மனதிற்குள் சொல்லிப்பாருங்கள்.

* உங்களது சூழ்நிலையை மாற்றுங்கள். அமர்ந்திருந்தால் எழுந்து நடங்கள். நடந்து கொண்டிருந்தால் சற்று நில்லுங்கள்.

* எவ்வளவு கோபம் ஏற்படுகிறதோ, அதைப் பொறுத்து 1 முதல் 1000 வரையிலான எண்களை எண்ணி சிந்தனையை மாற்றுங்கள்..100 எண்ணிக்கையை கடந்த உடன் உங்கள் மனநிலை சற்று மாறுவதை காணலாம்.

* இதன் மூலம் தான் உங்களது கோபத்தை கட்டுப்படுத்தலாம்....

- கோபம் வரும் போது மேலே கூறிய முறைகளில் ஏதாவது ஒன்றை கடைப்பிடித்து வந்தால் உங்கள் கோபம் குறைந்து அமைதி அடைவீர்கள்.


அல்லாஹ் தன் திருமறையில் 3:134 வசனத்தில் கோபத்தைப் பற்றி குறிப்பிடும் போது, (பயபக்தியுடையவர்கள்) கோபத்தை அடக்கிக்கொள்வார்கள். மனிதர்கள் செய்யும் தவறுகளை மன்னிப்பார்கள் என்று கூறுகிறான்.


ஒரு முறை ஒரு மனிதர் வந்து நபி (ஸல்) அவர்களிடம், ‘எனக்கு உபதேசியுங்கள் என்று கேட்டார். கோபம் கொள்ளாதே என்று நபியவர்கள் பதில் சொன்னார்கள். அவர் மீண்டும், மீண்டும் பல முறை உபதேசியுங்கள் என்று கேட்டபோது அப்போதும் நபியவர்கள் கோபம் கொள்ளாதே என்றே பதில் சொன்னார்கள். (அபூஹுரைரா (ரலி) – புகாரி, 

கோபம் கொள்ளாதே என்று நபியவர்கள் திரும்ப திரும்ப கூறியதிலிருந்து நாம் கோபத்தின் விளைவு எவ்வளவு பெரியது என்பதை விளங்கிக்கொள்ளலாம். சமுதாயத்தினரிடையே குழப்பம், உறவுகள் பிரிவு, உடல் நலக் கேடு என எல்லா வகையிலும் இந்த கோபம் முக்கிய ஆணிவேராக அமைகிறது.


எனவே கோபம் தவிர்ப்போம் 
நன்மையை வளர்ப்போம் 

சனி, 22 பிப்ரவரி, 2014

துறவி




   ஒரு வணிகனும், துறவியும் பசிக் களைப்புடன் அந்த சத்திரத்திற்கு வந்து சேர்ந்தனர்.

அந்தச் சத்திரத்தில் ஒருவருக்குத்தான் உணவு மீதமிருந்தது.


வணிகன் சந்நியாசியைப் பார்த்து, “இன்று ஏகாதசியாயிற்றே... துறவியாகிய தாங்கள் பட்டினி இருக்க வேண்டாமா?” என்று கேட்டான்.

துறவியும் வேறு வழியின்றி, “ஆமாம்” என்று தலையை ஆட்டினார்.


வணிகன் அங்கு கொடுக்கப்பட்ட சாப்பாடு முழுவதையும் வாங்கிச் சாப்பிட்டான்.

பின்னர் அங்கிருந்து இருவரும் சேர்ந்து செல்லத் தொடங்கினர். 

இடையில் ஒரு நதி குறுக்கிட்டது.

வணிகன் துறவியிடம், தன்னைத் தூக்கிச் செல்லும்படி கட்டளையிட்டான்.

துறவியும் அவனைத் தூக்கிச் சென்றார்.J


நதியில் பாதி தூரம் சென்ற பின்பு, துறவி வணிகனைப் பார்த்து, “உன் மடியில் என்ன இருக்கிறது?” என்று கேட்டார்.

வணிகன், “என் மடியில் பணமிருக்கிறது!” என்றான்.

உடனே துறவி, “அப்படியா? துறவியான நான் பணத்தைச் சுமக்கக் கூடாதே” என்றபடி அவனைத் தண்ணீரில் அப்படியே போட்டார்.

எவ்வளவோ மேல்.....!



1."கடன்காரான் " ஆவதை விட "பிழைக்கத் தெரியாதவன் " எவ்வளவோ மேல் .

2."டை " கட்டிய பணக்காரனை விட "கை " கட்டாத ஏழை எவ்வளவோ மேல் .

3."கெட்டவன் " ஆவதைவிட "கையாலாகாதவன் " எவ்வளவோ மேல் .

4."வல்லவன் " ஆவதைவிட " நல்லவன் "எவ்வளவோ மேல் .

5.குற்றம் புரியும் "அதிபுத்திசாலி"யை விட ஒன்றுமறியாத "முட்டாள்" எவ்வளவோ மேல் .

6."காதலி" க்காக உயிரை விடுபவனை விட "கட்டியவளை " காதலிப்பவன் எவ்வளவோ மேல் .

7.புறத்தில் அழகாய் அகத்தில் அழுக்காய் இருக்கும் "ஹீரோ "வை விட புறத்தில் அழுக்கும் அகத்தில் அழகும் நிறைந்த "காமெடியன் " எவ்வளவோ மேல் .

8.மாதர்தம்மை இழிவு செய்யும்" மதயானைகளை "விட நெறி தவறாத "எறும்பு " எவ்வளவோ மேல் .

9.வெற்றிகளி ன் "கர்வங்களை " விட தோல்வியிலும் "நம்பிக்கை " எவ்வளவோ மேல் .

10.பொய்யான "புரட்சி" களைவிட அமைதியான "அன்பு" எவ்வளவோ மேல்.

புத்தாண்டு கொண்டாடலாமா ?



புத்தாண்டு என்பது...

கிரிஸ்தவர்கள் ஈசா (அலை) அவர்களை கடவுளாக வணங்கிக்கொண்டிருக்கின்றனர். ஈசா (அலை) அவர்கள் பிறந்த நாளை ஆண்டின் துவக்க நாளாக கருதுகிறார்கள். எனவே அந்த நாளை புனித நாளாக கொண்டாடுகின்றார்கள். கிரிஸ்தவர்களின் இக்கலாச்சாரம் உலகம் முழுவதும் புத்தாண்டு என்றப் பெயரில் கொண்டாடப்பட்டு வருகின்றது.
ஈசா (அலை) அவர்கள் எந்த நாளில் எப்போது பிறந்தார்கள் என்பதற்கோ, அவர்களுக்கு எப்போது விருத்தசேதனம் செய்யப்பட்டது என்பதற்கோ எந்த ஆதாரமும் இல்லை.

எனவே புத்தாண்டு கொண்டாட்டம் கிரிஸ்தவர்களின் மத நம்பிக்கையுடன் ஒத்துப்போவதால் இவ்விஷயத்தில் அவர்களுக்கு ஒப்பாக நாம் நடக்கக்கூடாது.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
(மாற்று) சமூகத்தினருக்கு ஒப்பாக நடப்பவர் நம்மைச் சார்ந்தவர் இல்லை.
அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி)
நூல் : அபூதாவுத் (3512)

மேலும் புத்தாண்டு கொண்டாட்டம் அறிவுக்கு மாற்றமான செயலாகவும் உள்ளது
 புதிய ஆண்டு துவங்குவதால் மக்களுக்கு என்ன நன்மை ஏற்பட்டிருக்கின்றது?
ஆண்டின் துவக்கம் சந்தோஷமாக இருந்தால் அந்த ஆண்டு முழுவதும் சந்தோஷமாக இருக்கலாம் என்ற மூட நம்பிக்கையே இந்த கொண்டாட்டத்திற்கு அடிப்படை.

இஸ்லாம் நமக்கு இரண்டு நாட்களையே கொண்டாட்டத்திற்குரிய நாட்களாக ஆக்கியுள்ளது. தேவையற்ற கொண்டாட்டங்களை தடைசெய்கின்றது.


மதீனாவாசிகள் எந்த ஒரு அடிப்படையும் இன்றி இரண்டு
நாட்களைகொண்டாட்டத்திற்குரிய நாட்களாக கருதிவந்தனர். இதை கைவிட்டுவிட்டு நோன்புப் பெருநாள் ஹஜ்ஜுப் பெருநாள் ஆகிய இரண்டை மட்டுமே பெருநாளக ஆக்கிக்கொள்ளுமாறு நபி (ஸல்) அவர்கள்உத்தரவிட்டார்கள்.

அனஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள் :
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மதினாவிற்கு வந்தார்கள். (மதீனத்து) மக்களுக்கு இரண்டு நாட்கள் (பெருநாட்களாக) இருந்தன. அதில் அவர்கள் விளையாடுவார்கள். இந்த இரண்டு நாட்களும் என்ன? 
என்று நபி (ஸல்) கேட்டார்கள். அறியாமைக் காலத்தில் நாங்கள் அந்த இரண்டு நாட்களிலும் விளையாடுவோம் என்று மக்கள் கூறினார்கள். 

அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "அல்லாஹ், அவ்விரண்டையும் விட சிறந்ததை அவ்விரண்டிற்கும் பதிலாக உங்களுக்குத் தந்திருக்கின்றான். அவை ஹஜ்ஜுப் பெருநாளும் நோன்புப் பெருநாளுமாகும்'' என்று கூறினார்கள்.
நூல் : அபூதாவுத் (959)

. புத்தாண்டு என்ற மேலைநாட்டுக் கலாச்சாரம் நம் நாட்டில் ஊடுருவியதன் விளைவு அன்றைய நள்ளிரவில் விபச்சாரமும் மதுவும் தலைவிரித்து ஆடுகின்றது. பெண்கள் ஒழுக்கம் கெட்டு நடக்கின்ற கேவலமும் இந்நாளில் அரங்கேறுகின்றது.

வானவெடிகள் என்ற பெயரில் பல்லாயிரக்கணக்கான ரூபாய்களை நாசமாக்கப்படுகின்றது

. இவ்வளவு அனாச்சாரங்களும் புத்தாண்டு என்ற பெயரிலேயே நடக்கின்றன. எனவே புத்தாண்டை நாம் புறக்கணிக்க வேண்டும்


புத்தாண்டு கொண்டாட்டம் மார்க்கத்திற்கு மாற்றமான காரியம் என்பதால் அதற்காக வாழ்த்துச் சொல்வதும் கூடாது.  
                             
புத்தாண்டு வாழ்த்துக்கள் என்று கூறினால் 
புத்தாண்டை நாம் ஆதரித்ததாக ஆகிவிடும்

உழைப்பே உயர்வு



"உழைக்காமல் உயர்வு கிடைக்காது".. 
............................................................

ஒரு ஊரில் ஒரு ராஜா இருந்தார். அவர் பிறந்த நாளையட்டி அந்த தேசத்திலிருந்த அறிஞர்களெல்லாம் அவரைப் புகழ்ந்து பாடல்களைப் பாடிக் குவித்தனர்.

ராஜா அவர்களைப் பாராட்டி விட்டுக் கூறினார்:-

அறிஞர் பெருமக்களே!

உங்கள் அறிவுத் திறமையைக் கண்டு வியந்துபோகிறேன். ஆனாலும் இந்த அறிவுத் திறமை என்னைப் புகழ்வதில் மட்டும் இருந்து வீணாகி விடக் கூடாது.

எதிர்கால சந்ததியினருக்கு உங்கள் அறிவு மிகவும் பயன்பட வேண்டும். ஆகவே அதற்கு உங்கள் அறிவைப் பயன்படுத்த
என்ன செய்யலாம்?

ஒரு சாமான்ய மனிதனுக்குக் கூடப் புரியும்படி உங்கள் அறிவின் மூலம் ஏதேனும் சொல்ல வேண்டும்"

அறிஞர்கள் கூடி தங்களுக்குள் விவாதித்து, பின்னர் ராஜாவிடம்,

" ஏற்கனவே முன்னால் இருந்த அறிஞர்கள் கூறியதை விட புதிதாக சொல்ல ஒன்றும் இல்லை" என்று கருத்துத் தெரிவித்தனர்.

மனம் மிக மகிழ்ந்த ராஜா, "அப்படியா! அந்த அறிஞர்கள் கூறியதை எல்லாம் எளிய மொழியில் அப்படியே தொகுத்துக் காண்பியுங்கள்' என்றார்.

அறிஞர்கள் மீண்டும் கூடினர். ஒருவாறாக ஆராய்ந்து அனைத்துக் கருத்துக்களையும் தொகுத்தனர்.

ராஜாவை அணுகிய அறிஞர்கள் குழு பெருமிதத்துடன் ,

"அரசப் பெருமானே! அனைத்தையும் தொகுத்து விட்டோம். இதோ பாருங்கள்"என்று கூறி தொகுப்பை நூறு நூல்களாக ஆக்கிக் கொடுத்தனர்.

ராஜா மிகவும் மகிழ்ச்சி அடைந்தார்.

இருந்த போதிலும் அவர் அறிஞர்களை நோக்கி,

"உங்கள் திறமையைக் கண்டு வியக்கிறேன்.

என்றாலும் சாமான்யமான ஒருவனை நோக்கி நூறு நூல்களைப் படி என்றால் அவனால் அது எப்படி முடியும்?

ஆகவே இந்த நூறு நூல்களைச் சுருக்கிக் கொண்டு வாருங்கள்" என்றார்.

அறிஞர்கள் மிகவும் கஷ்டப்பட்டு நூறு நூல்களின் சாரத்தை ஒரே நூலாக ஆக்கி ராஜாவிடம் சமர்ப்பித்தனர்.

மகிழ்ந்து போன ராஜா மீண்டும் அறிஞர்களைப் பாராட்டினார்.

"ஆனால் அறிஞர் பெருமக்களே! இந்த ஒரு நூலையும் கூடப் படிக்க முடியாத படி ஏழை மக்கள் எத்தனையோ பேர் இருப்பார்கள் அல்லவா!

இதை இன்னும் சுருக்கிக் கொண்டு வாருங்கள்" என்றார்.

அறிஞர்கள் ஓயாது விவாதித்து இறுதியாக ஒரு பக்கத்தில் அனைத்தையும் சுருக்கிக் கொண்டு வந்து ராஜாவிடம் சமர்ப்பித்தனர்.

அதைப் படித்துப் பார்த்த ராஜா,"

ஆஹா, மிக மிக அற்புதம். என்றாலும் ஒரு சிறு குறை எனக்கு இருக்கிறது. இந்த ஒரு பக்கமும் கூடச் சற்று அதிகம் என்றே எனக்குத் தோன்றுகிறது.

இதை ஒரே வரியில் சுருக்க வேண்டுமே.

உங்களால் முடியாதது ஒன்று உண்டா, என்ன?"

அறிஞர்கள் குழு தீவிரமாக விவாதித்தது. இறுதியில் அறிஞர்கள் தங்கள் முடிவை ராஜாவிடம் ஒரு சிறிய ஓலை நறுக்கில் எழுதித் தந்தனர்.

அதைப் படித்துப் பார்த்த ராஜா துள்ளிக் குதித்தார்.

"இதை.. இதைத் தான் நான் எதிர்பார்த்தேன்.

எல்லாவற்றையும் கரைத்துக் குடித்த நீங்கள் சாரத்தை வடித்துத் தந்து விட்டீர்களே!

இதை சாமான்யனும் புரிந்து கொள்வான்" என்று மகிந்து கூறி அந்த வாசகத்தை அறிஞர்களின் வாசகமாகத் தன் தேசமெங்கும் பறையறிவித்தான்.

அந்த வாசகம் என்ன தெரியுமா?

"உழைக்காமல் உயர்வு கிடைக்காது"..

என்பது தான் அந்த வாசகம்! 



சூப்பர் தகவல்

தெரிந்துந்து கொள்வோம்...!

1.உலகப்புகழ் பெற்ற மோனாலீசா ஓவியம் இடது கையால் வரையப்பட்டது.

2. எப்போதும் காற்று வீசும் திசையிலேயே தலை வைத்துப் படுக்கும் மிருகம் நாய்.

3. தேசியக் கொடியை முதல் முதலில் உருவாக்கிய நாடு டென்மார்க் 1219ல் உருவாக்கியது.

4. எறும்புகள் உணவு இல்லாமல் 100 நாட்கள் வாழும்.

5. ஒரு பென்சிலைக் கொண்டு 58 கி.மீ நீளமான கோடு போடலாம்.

6.பாம்புகளுக்கு கேட்கும் சக்தி கிடையாது.

7. நண்டிற்கு தலை கிடையாது அதன் பற்கள் வயிற்றில் இருக்கும்.

8.வெள்ளை என்பது ஒரு நிறம் இல்லை அது ஏழு வர்ணங்களின் கலவை.

9.முற்றிப் பழுத்து காய்ந்த தேங்காய் மரத்திலிருந்து பகலில் விழாது இரவில்தான் விழும்.

10. நமக்கு உடல் முழுவதும் வியர்க்கும் ஆனால் நாய்க்கு நாக்கில் மட்டுமே வியர்க்கும்.

11. சிலந்திப் பூச்சிக்கு எட்டுக் கண்கள் உண்டு.

12. இறாலுக்கு இதயம் தலையில் இருக்கிறது

13.ஆப்கானிஸ்தானில் ரயில் கிடையாது.

14இந்தியாவில் தமிழில் தான் “பைபிள்”முதலில் மொழிபெயர்க்கப்பட்டது.

15.ஆண் சிங்கம் சாப்பிட்ட பின்னரே பெண் சிங்கம் சாப்பிடும்.

16. வாத்து அதிகாலையில் மட்டுமே முட்டையிடும் .

17.கத்தரிக்காயின் தாயகம் இந்தியா தான்.

18.பிரேசில் நாட்டு தேன் கசக்கும்.

19.முன்னாள் இந்திய ஜனாதிபதியாகிய அப்துல் கலாம் சிறந்த வீணை கலைஞரும் ஆவார்.

20.உலகில் கடற்கரை இல்லாத நாடுகள் 26 ஆகும்.

21.அமெரிக்காவை விட சகாரா பாலைவனம் பெரியது.



வெள்ளி, 21 பிப்ரவரி, 2014

வைரக்கற்கள்


கல்வி என்பது.....உதாரணம்...!


வீரர்கள் ஒரு நாள் இரவு ஒரு பாலைவனத்தின் வழியே சென்று 

கொண்டிருந்தனர்.அப்போது ஒரு அசரீரி கேட்டது

,''இங்கே இறங்குங்கள். இந்த இடத்திலிருந்து கிடைக்கக் கூடியதை 

எவ்வளவு எடுத்துச்செல்ல முடியுமோ அவ்வளவு எடுத்துச் 

செல்லுங்கள்.

நாளை காலை நீங்கள் மகிழ்ச்சியும் கவலையும் அடைவீர்கள்.''


வீரர்கள் உடனே கீழே இறங்கி அந்த கடும் இருளில் தடவிப் பார்த்து 

கிடைத்த கற்களை பைகளில் நிரப்பி எடுத்துச் சென்றனர்.மறு நாள்

 காலை அவர்கள் அந்தப் பைகளை எடுத்துப் பார்த்த போது அந்தக்

 கற்கள் அனைத்தும் வைரமாக இருப்பதைக் கண்டனர்.

ஒரு பக்கம் அவர்களுக்கு வைரங்கள் கிடைத்ததில் மகிழ்ச்சி.அதே

 சமயம் இன்னும் கொஞ்சம் கொண்டு வராமல் போனோமே என்று 

வருத்தம்.அசரீரி சொன்னது உண்மையாயிற்று.

வாழ்க்கையில் கல்வி என்பது ஒரு பெரிய சொத்து.வாலிப வயதில்

 நாம் படிப்பதன் மூலம் நிறைய நல்ல விசயங்களைக் கற்றுக்

 கொள்கிறோம்.. 

ஆனால் வயதான பின் இன்னும் கொஞ்சம் படித்திருக்கலாமே என்று

 வருத்தப் படுகிறோம்

உங்கள் செல்போன் ஒரிஜினல்தானா..?! கண்டுபிடிப்பது எப்படி..?!



உங்கள் செல்போன் ஒரிஜினல்தானா..?


நீங்கள் அதிகம் விலைக்கொடுத்து வாங்கிப் பயன்படுத்தும் செல்போன்கள் அனைத்தும்

 ஒரிஜினல்தானா என்பதை சோதித்துப் பார்ப்பது தற்போது கட்டாயமாகும்.

சில ஆயிரம் ரூபாய் முதல் பல ஆயிரம் ரூபாய்வரை கொடுத்து ஒரு புதிய மாடல் 

செல்போனை வாங்கும்போது, அதனுடைய உண்மைத்தன்மையை அறிய வேண்டும் அல்லவா...?

உண்மையான நிறுவனத் தயாரிப்பாக இருக்க வேண்டும் இல்லையா? உண்மையான 

நிறுவனத்தைப் போன்றே தற்போது போலியான தயாரிப்புகள் தற்போது விலைக்கு வந்து 

அசல் எது? போலி எது என்று கண்டுபிடிக்க முடியாதவாறு எந்த வித்தியாசமும் இல்லாமல் காணப்படும்.


இவ்வாறான போலி தயாரிப்பு மொபைல்களைக் கண்டறிய கீழ்க்கண்ட வழிமுறைகள் உங்களுக்கு உதவும்.

முதலில் நீங்கள் உங்கள் மொபைல் போன் ஒரிஜினல்தானா என்பதைக் கண்டறிய International Mobile Equipment Identification எனப்படும் IMEI எண்ணை அறிந்துகொள்ள வேண்டும்.


உங்கள் மொபைலில் IMEI எண்ணைக் கண்டுபிடிப்பது எப்படி?

சாதாரண செயல்பாட்டின் மூலம் IMEI எண்ணைக் கண்டறிய முடியும். உங்கள் மொபைலில் *#06# என தட்டச்சிடுங்கள்...உடனே உங்கள் மொபைல் போனிற்கான IMEI எண் காட்டபடும். அந்த IMEI எண்ணை குறித்து வைத்துக்கொள்ளுங்கள்.


அந்த IMEI ண்ணை ஒரு SMS ஆக தட்டச்சிட்டு 53235 என்ற எண்ணிற்கு SMS செய்துவிடுங்கள்.

இப்பொழுது உங்கள் பதில் SMS ஆக Success என்ற செய்தி வந்திருக்கும். அப்படி

 வரவில்லையென்றால் உங்கள் மொபைல் போலியானது என்பதை நீங்கள் 
அறிந்துகொள்ளலாம்.

இந்த முறையில் உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருப்பின் இணையத்தின் மூலமும் நீங்கள் உறுதிப்படுத்திக்கொள்ள முடியும்.

http://www.numberingplans.com/?page=analysis&sub=imeinr

என்ற இந்த இணைய முகவரிக்கு சென்று நீங்கள் குறித்துவைத்துக்கொண்ட IMEI எண்ணை

 உள்ளிடுவதன் மூலம் உங்கள் மொபைல் போனைப் பற்றிய கூடுதல் தகவல்களையும் 

நீங்கள் பெற முடியும்.

குறிப்பு: IMEI எண்ணானது பதினைந்து இலக்க எண்ணாக இருக்கும்.

உங்களுடைய மொபைல் தயாரிப்புக்குரிய நாடுகளையும், தரத்தையும் இந்த IMEI எண்களை 

வைத்துக் கண்டறிய முடியும்.

அதாவது நீங்கள் குறித்துவைத்த IMEI எண்ணில் 7, 8 வது இலக்க எண்கள்


1. 0,2
அல்லது 2,0 என இருப்பின் ஐக்கிய அரபு எமிரேட்சில் அசெம்பிள் செய்யப்பட்டதாக 

இருக்கும்

. இதனுடைய தரம் குறைந்ததாக இருக்கும்.

2. 0,8
அல்லது 8,0 என இருபின் ஜெர்மனி நாட்டு தயாரிப்பாகவும்,தரமானதாகவும் இருக்கும்.

3. 0,1
அல்லது 1,0 என இருப்பின் அது பின்லாந்து நாட்டுத் தயாரிப்பாகவும் தரமிக்கதாகவும் 

இருக்கும்.

4. 1,3
என இருப்பின் Azerbaijan நாட்டு அசெம்பிள் தயாரிப்பாகவும்,தரம் குறைந்தும்

உடலுக்கு தீங்கு விளைவிக்க கூடியதாகவும் இருக்கும்.