சனி, 2 நவம்பர், 2013

கொசுவை ஏன் குர்ஆனில் அல்லாஹ் கூறினான் ?



குர்ஆனில் கொசு ஓர் அதிசயம்!

கொசு தோற்றத்தில் மிகவும் சிறியது! அற்பமானது! ஆனால் படைப்பில் அது அற்புதமானது!!
விந்தையானது. 

           மேற்கொண்டு படியுங்கள்.
1. அது பெண்பால்.
2. அதற்கு அதன் தலையில் 100 கண்கள்.
3. அதன் வாயில் 48 பற்கள்.
4. அதன் உடலில் மாறுபட்ட மூன்று இதயங்கள்.
5. அதன் தும்பிக்கை நுனியில் ஆறு அறைகள்.
6. அவை ஒவ்வொன்றுக்கும் தனித்தனி அலுவல்கள்
7. ஒவ்வொரு பக்கத்திலும் மூன்று இறக்கைகள்.
8. எக்ஸ்ரே கருவி போன்ற நுண்ணிய தர்மோமீட்டர் பொருத்தப்பட்ட சிவப்பு நிறத்தில் ஒரு நுண்ணிய கருவி அதனுள் படைக்கப்பட்டுள்ளது. அதன் வேலை அது மனித உடலில் இருளில்
வந்து அமர்ந்து இரத்தத்தை உறிஞ்சும் போது யாரும் கண்டு கொள்ள முடியாத அளவுக்கு
மனிதனுடைய நிறத்திற்கேற்றவாறு தன் நிறத்தை மாற்றிக்கொள்கிறது..
9. மனித மூளையே வியக்குமளவுக்கு அதனிடமுள்ள கூரிய ஊசி முள்ளால் குத்தி
சிறிஞ்சியைப் போல் உறிஞ்சிக் குடிக்கிறது. அது எப்படீ பாய்ந்து உள்ளே செல்கிறது என்பதை
நாம் தெரிந்து கொள்ள முடியாது.
10. மனிதனின் இரத்த வாசனையை 60 கி.மீட்டர் தொலைவிற்கு அப்பாலிருந்து நுகர்ந்து
தெரிந்து கொள்ளும் அற்புத ஆற்றலை அது பெற்றிருக்கிறது.
11. இவை எல்லாவற்றிற்கும் மேலாக அதன் முதுகின் மேல் கண்களால் பார்க்கமுடீயாத
அளவுக்கு மிகச்சிறிய ஒரு பூச்சி உள்ளது என இன்றைய அறிவியல் கண்டு பிடித்துள்ளது.

அது அல்லாஹ்வின் அருள் மறையின் அற்புதச்செய்தியை முன்னறிவிப்பதாக உள்ளது. அது
என்ன வசனம் தெரியுமா
إِنَّ اللَّهَ لاَ يَسْتَحْيِي أَن يَضْرِبَ مَثَلاً مَّا بَعُوضَةً فَمَا فَوْقَهَا
நிச்சயமாக அல்லாஹ் கொசுவையோ அதைவிட அற்பமானதையோ (அதன் மேலுள்ளதையோ) உதாரணமாகக் கூற
வெட்கப்படமாட்டான் (அல்பகரா :2:26) இந்த இறை வசனம் எப்போது அருளப்பட்டது தெரியுமா?
இணைவைப்பவர்களுக்கு உடுத்துக்காட்டாக அல்லாஹ் 22:73-வது வசனத்தில் ஈயையும், 29:41-
வது வசனத்தில் சிலந்தியையும் உவமையாகக் கூறுகிறான். இதைக் கேட்ட
இணைவைப்பாளர்கள் ஈயும்சிலந்தியும் அல்லாஹ்வின் வேதத்தில் கூறப்படுகின்றனவா?
என்று இளக்காரமாகக் கேட்டனர்.அப்போது தான் அல்லாஹ் இவ்வசனங்களை அருளி இப்படிக்
கூறினான்.
நிச்சயமாக அல்லாஹ் கொசுவையோ அதைவிட அற்பமானதையோ (அதன்
மேலுள்ளதையோ) உதாரணமாகக் கூற வெட்கப்படமாட்டான் (அல்பகரா :2:26) அதாவது
சத்தியம் என வந்து விட்டால் அது எவ்வளவு அற்பமானதாக இருந்தாலும்,பெரிதாக
இருந்தாலும் அதைக் கூறுவதற்கு அல்லாஹ் தயங்கமாட்டான்எனக்கூறிவிட்டு
அறிவியலுக்கு ஒரு சவாலாக கண்ணுக்குப் புலப்படாத ஓர் அற்பமான ஒரு பூச்சியையும் அதன்
மேல் படைத்துள்ளான். அது அதன் குழவிக்குஞ்சாகவோ அதை தூய்மைப் படுத்தும் ஒரு அரிய
படைப்பாகவோ இருக்கலாம்  அதை அல்லாஹ்வே நன்கறிந்தவன்.



ஆதாரம்: அல்மஃரிபீ பில்குர்ஆனில் கரீம்.காம்,


வெள்ளி, 1 நவம்பர், 2013

யார் அதிபுத்திசாலி ?

ஆஹா...இதுவன்றோ மெய்யறிவு...!
***********************************


நபிமொழிக் கலையிலும் இஸ்லாமியச் சட்ட அறிவிலும் 
திருக்குர்ஆன் விரிவுரைக் கலையிலும் 
மாபெரும் ஆற்றலைப் பெற்றிருந்தவர் 
அப்துல்லாஹ் இப்னு முபாரக் (ரஹ்) எனும் அறிஞர். 


இவர் மார்க்க அறிஞராக மட்டுமின்றி 
மாபெரும் வணிகராகவும் திகழ்ந்தார்.


ஒருநாள் அவர் தம் வணிகம் தொடர்பாக 
மற்றொரு நகரத்துக்குச் சென்று கொண்டிருந்தார். 


வழியில் ஒரு காடு. அதைக் கடந்துகொண்டிருந்தபோது
அங்கே ஓர் இளைஞனைக் கண்டார். 


அறிவொளி வீசும் இளைஞரின் முகமும் கண்களும் 
அவரைப் பெரிதும் கவர்ந்தன. 


இவன் காட்டில் இருப்பதால் 
அறிஞர்களின் தொடர்பு கிடைக்க வழி யில்லையே. 
அதனால் இவனுடைய கல்வியறிவு 
பாதிக்கப்பட்டிருக்குமேஎன 
அப்துல்லாஹ் இப்னு முபாரக்(ரஹ்) கருதினார். 


அவர் அந்த இளைஞரிடம் பேச விரும்பினார். 


தம்பி, நீ ஏதாவது கல்வியறிவு பெற்றிருக்கிறாயா? 
அல்லது வீணே காலத்தைக் கழிக்கின்றாயா?” 


தன்னிடம் வலிய வந்துபேசும் அவரை 
ஏறிட்டு நோக்கிய இளைஞன் பிறகு 
அமைதியாகச் சொன்னான்:


நான் அதிகம் படித்தவனல்லன். ஆயினும் 
நான்கு விஷயங்கள் பற்றிய அறிவைப் பெற்றுள்ளேன். 

சிரம், செவி, நாவு, உள்ளம்

ஆகிய நான்கைப் பற்றியும் நன்கு அறிந்துள்ளேன்


இளைஞனின் மறுமொழி 
அவரைப் பெரிதும் வியப்புக்குள்ளாக்கியது. 
அந்த நான்கு அறிவைப் பற்றிக் 
கொஞ்சம் விளக்கும்படி கேட்டுக் கொண்டார்.


அல்லாஹ்வின் சந்நிதியில் 
தாழ்ந்து நின்று வணங்குவதற்காகத்தான் தலை. 
இறைவாக்குகளைக் கேட்பதற்காகத்தான் காதுகள். 
அவன் புகழைப் பாடவே நாவு. 
அவன் நினைவைப் பதித்துக்கொள்ளவே உள்ளம்.



அறிஞர் அப்துல்லாஹ் இப்னு முபாரக்கின் 
வியப்பு எல்லை கடந்தது. 


மாபெரும் இஸ்லாமிய அறிஞரான அவர் 
அந்த இளைஞனிடம் தம்பி, எனக்கு ஏதேனும் 
அறிவுரை கூறுவாயாகஎனத் 
தாழ்மையுடன் வேண்டிக் கொண்டார்.


பெரியவரே, தாங்கள் யார் என்று எனக்குத் தெரியாது. 
ஆயினும் தங்களின் தோற்றத்திலிருந்தும் பேச்சிலிருந்தும் 
தாங்கள் மிகச் சிறந்த அறிஞராக 
இருக்க வேண்டும் என்றே நினைக்கிறேன். 

”தாங்கள் இறை உவப்புக்காகக் 
கல்வி அறிவைப் பெற்றிருந்தால் 
இந்த உலகத்திலிருந்து எதையும் எதிர்பார்க்காதீர்கள். 
மாறாக, வெறும் உலகியலுக்காகத் 
தாங்கள் கல்வி அறிவைப் பெற்றிருந்தால் 
அல்லாஹ்விடமிருந்து எதையும் எதிர்பார்க்காதீர்கள்.



இதுதான் உண்மையான மெய்யறிவு என்று 
அறிஞர் உணர்ந்து கொண்டார்.