திங்கள், 31 மார்ச், 2014

காசு கொடுத்து சொர்க்கத்தை வாங்க முடியாது



ஒரு பெரிய மனிதன். இந்த உலகத்தில் மிகவும் வசதியாக வாழ்ந்தான்.

ஒரு நாள் அவன் உலக வாழ்க்கையை முடித்துக் கொண்டு சொர்க்கத்துக்குப் போனான்.

அங்கே போன பிறகுதான் தெரிந்தது... சொர்க்கத்தின் வாசல் கதவு மூடி இருந்தது.

மூடிய கதவின் முன்னால் போய் நின்றான்.

‘‘
இங்கே யாருமே இல்லையா?’’ என்று உரக்கக் கத்தினான். பதில் இல்லை.

‘‘
நான் ஒரு பெரிய மனிதன் வந்திருக்கிறேன். கதவைத் திறந்து விடு!’’

சற்று நேரத்தில் சித்ரகுப்தன் அங்கே வந்தான்.

உடனே இந்தப் பெரிய மனிதன், தனது சட்டைப்பையிலிருந்து பத்து ரூபாய் நோட்டை எடுத்து அவன் கையில் திணித்தான்.

‘‘
இந்தா... இதை வெச்சுக்கோ... சீக்கிரம் கதவைத் திற... நான் உள்ளே போகணும்!’’

சித்ரகுப்தன் சிரித்தான்.

‘‘
இதெல்லாம் உங்கள் பூலோக நடைமுறை கள்--& லஞ்சம் கொடுக்கறது, கதவைத் திறக்கச் சொல்றது... அதெல்லாம் இங்கே ஒண்ணும் எடுபடாது!’’

‘‘
அப்படின்னா நான் எப்படி உள்ளே வர்றது?’’

‘‘
சொர்க்கத்துலே நுழையறதுக்கான அனு மதிச் சீட்டு கொண்டு வந்திருக்கியா?’’

‘‘
அனுமதிச் சீட்டா? அது எங்கே கிடைக்கும், சொல். எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை. வாங்கிக்கலாம்.’’

‘‘
அதைக் காசு கொடுத்து வாங்க முடியாது!’’

‘‘
வேறே எப்படி வாங்கறது?’’

‘‘
அடுத்தவர்களுக்கு ஏதாவது உதவி செஞ்சாத்தான் அது கிடைக்கும்.’’

‘‘
என்ன சொல்றே நீ?’’

‘‘
பூலோகத்துலே நீ செய்யுற புண்ணிய காரியங்கள்தான் சொர்க்கத்துலே நுழையறதுக்கான அனுமதிச் சீட்டு!’’

‘‘
இப்ப நான் உள்ளே வர என்ன வழி?’’

‘‘
பூலோகத்துலே நீ யாருக்காவது... ஏதாவது உதவி செஞ்சிருக்கியா?’’

பெரிய மனிதன் ரொம்ப நேரம் யோசித்தான்.


பிறகு சொன்னான்: ‘‘ஒரு முறை ஒரு கிழவிக்கு 10 காசு தானம் கொடுத்திருக்கேன்.... அப்புறம் இன்னொரு நாள் ஓர் அநாதைப் பையனுக்கு ஐந்து காசு கொடுத்திருக்கேன்.’’

‘‘
கொஞ்சம் பொறு!’’ என்று சொல்லிவிட்டு சித்ரகுப்தன் உள்ளே போனான்.

கொஞ்ச நேரம் கழித்து வெளியே வந்தான்.

‘‘
உள்ளே போய் சொர்க்கத்தின் தலைவர்கிட்டே உனது கதையைச் சொன்னேன். அவர் உடனே உத்தரவு போட்டுட்டார்!’’

‘‘
என்ன உத்தரவு?’’

‘‘
அந்தப் பதினஞ்சு காசை உன்கிட்டே திருப்பிக் கொடுத்துடச் சொன்னார்!’’

‘‘
அப்புறம்?’’

‘‘
உன்னை நரகத்துக்கே அனுப்பி வெச்சுடச் சொன்னார்!’’ பெரிய மனிதன் மயங்கி விழுந்தான்.

ஆன்மிக உலகில் பயணம் செய்கிறவர்கள் புரிந்து கொள்ள வேண்டிய ஒரு முக்கியமான பாடம்:

காசு கொடுத்து சொர்க்கத்தை வாங்க முடியாது; ஆனால், கருணையைக் கொடுத்து அதைச் சுலபமாக வாங்க முடியும்!



புதன், 26 மார்ச், 2014

நாம் எப்போது அனுசரித்து போக வேண்டும்...!


தவளையும் மனிதனும்...


சூழ்நிலைக்கு ஏற்ப மாறக் கூடிய சக்தி மனிதனுக்கும்தவளைக்கும் ஒரே மாதிரி தான் இருக்கிறது.
ஒரு தவளையை பிடித்து தண்ணீரில் போட்டு கொதிக்கவையுங்கள்,தண்ணீரின் வெப்பம் அதிகரிக்கும்போதுதவளை தன் உடலை அந்த வெப்ப நிலைக்கு ஏற்பமாற்றி கொண்டே வரும்.வெப்பம் ஏற ஏறதவளையும் அந்த வெப்பநிலைக்கு ஏற்ப தன் உடலை அந்தவெப்பத்துக்கு ஏற்ப மாற்றி கொள்ளும்.
தண்ணீர் கொதிநிலையை அடையும்போது வெப்பத்தை தாங்கமுடியாமல்தவளை பாத்திரத்தில் இருந்து வெளியே குதிக்கமுயற்சி செய்யும்.ஆனால்,எவ்வளவு முயற்சி செய்தாலும் தவளையால்வெளியேற முடியாது. ஏன் என்றால்வெப்பத்துக்கு ஏற்ப தன்உடலை மாற்றி கொண்டே வந்ததால்அது வலுவிழந்து போய் இருக்கும். சிறிது நேரத்தில் அந்ததவளை இறந்துவிடும்.
எது அந்த தவளையை கொன்றது ?
பெரும்பாலானோர் கொதிக்கும் நீர் தான்அந்ததவளையை கொன்றது என்று சொல்வீர்கள்.
ஆனால் உண்மை என்னவென்றால்,எப்போது தப்பித்து வெளியேற வேண்டும் என்று சரியாகமுடிவெடுக்காத அந்த தவளையின் இயலாமை தான்அதை கொன்றது.
நாமும் அப்படித்தான் எல்லோரிடமும் சூழ்நிலைக்கு ஏற்பஅனுசரித்து போகிறோம்.ஆனால் நாம் எப்போது அனுசரித்து போகவேண்டும், எப்போது எதிர்கொள்ள வேண்டும்என்பதை தெரிந்து வைத்திருக்க வேண்டும்.
மனரீதியாக,உடல்ரீதியாக,பணரீதியாக மற்றவர்கள்நம்மை நசுக்க ஆரம்பிக்கும்போது நாமும் சுதாரிக்காமல்போனால் மீண்டும் அதையே தொடர்ச்சியாகசெய்ய ஆரம்பிப்பர்.உடலில் வலிமை இருக்கும்போதே அவர்களிடமிருந்து தப்பித்துவிடுதல் நன்று.
நாம் அனுமதித்தால் ஒழிய நம்மை அழிக்க எவராலும்முடியாது.


சரியான போட்டி

ஒரு டாக்டர், ஒரு எஞ்சினியர் ஒரு வக்கீல் மூணு

பேரும் ஒரு கம்பெனியோட தலைவர் பதவிக்குப்

போட்டியிட்டாங்க.

நேர்முகத் தேர்வுல பல கேள்விகள் கேட்கப்பட்டன...

கடைசிக் கேள்வி : ரெண்டும் ரெண்டும் எவ்வளவு?
தனித் தனியாகத் தான்....

டாக்டர் ரொம்ப யோசிச்சு நாலுன்னு சொன்னார்.

எஞ்சினியர் ஏதோ படமெல்லாம் போட்டுட்டு
கணக்குப் பண்ணி நாலுன்னு சொன்னார்.

கடைசியா வந்த வக்கீல் , எழுந்து ஜன்னல் கதவை

எல்லாம் அடைச்சார். வாசக் கதவத் தாப்பாள்

போட்டார். சீலிங், லைட்டு, டெலிபோன், ச்விட்சு

எல்லாத்தையும் செக்கப் பண்ணி காமிரா

ஒட்டுக்கேக்குற கருவி ஏதும் இல்லன்னு உறுதி

செஞ்ச பிறகு வந்து " எவ்வளவா இருக்கணும்னு

நீங்க நினைக்கிறீங்க?" அப்படீன்னார்.

பதில் யு ஆர் அப்பாயிடட்.


பிரயாண துஆ


வாகனத்தில் ஏறும் போது பிஸ்மில்லாஹ் என்று கூறவேண்டும்.


ஏறி உட்கார்ந்ததும் அல்லாஹு அக்பர் என்று 3 தடவைகள் கூறிவிட்டு பின்னர்; பின்வரும் துஆவை ஓத வேண்டும்.


سُبْحَانَ الَّذِى سَخَّرَ لَنَا هَذَا وَمَا كُنَّا لَهُ مُقْرِنِينَ وَإِنَّا إِلَى رَبِّنَا لَمُنْقَلِبُونَ اللَّهُمَّ إِنَّا نَسْأَلُكَ فِى سَفَرِنَا هَذَا الْبِرَّ وَالتَّقْوَى وَمِنَ الْعَمَلِ مَا تَرْضَى اللَّهُمَّ هَوِّنْ عَلَيْنَا سَفَرَنَا هَذَا وَاطْوِ عَنَّا بُعْدَهُ اللَّهُمَّ أَنْتَ الصَّاحِبُ فِى السَّفَرِ وَالْخَلِيفَةُ فِى الأَهْلِ اللَّهُمَّ إِنِّى أَعُوذُ بِكَ مِنْ وَعْثَاءِ السَّفَرِ وَكَآبَةِ الْمَنْظَرِ وَسُوءِ الْمُنْقَلَبِ فِى الْمَالِ وَالأَهْلِ

சுப்(B)ஹானல்லதீ ஸக்கரலனா ஹாதா வமாகுன்னா லஹுமுக்ரினீன். வஇன்னா இலா ரப்(B)பி(B)னா லமுன்கலிபூ(B)ன். அல்லாஹும்ம இன்னா நஸ்அலு(க்)க பீ(F) ஸப(Fரினா ஹாதா அல்பி(B)ர்ர வத்தக்வா வமினல் அமலி மா(த்)தர்ளா. அல்லாஹும்ம ஹவ்வின் அலைனா ஸப(F)ரனா ஹாதா வத்வி அன்னா பு(B)ஃதஹு, அல்லாஹும்ம அன்(த்)தஸ் ஸாஹிபு(B) பி(F)ஸ்ஸப(F)ரி வல் கலீப(F)(த்)து அஹ்லீ அல்லாஹும்ம இன்னி அஊது பி(B)(க்)க மின் வஃஸாயிஸ் ஸப(F)ரி வகாப(B)தில் மன்ளரி வஸூயில் முன்கலபி(B) பி(F)ல் மாலி வல் அஹ்லி

பொருள் : அல்லாஹ் மிகப் பெரியவன். எங்களுக்கு இதை வசப்படுத்தித் தந்தவன் தூயவன். நாங்கள் இதன் மேல் சக்தி பெற்றவர்களாக இருக்கவில்லை. மேலும் நாங்கள் எங்கள் இறைவனிடமே திரும்பிச் செல்பவர்கள். இறைவா! எங்களின் இந்தப் பயணத்தில் நன்மையையும், இறையச்சத்தையும், நீ பொருந்திக் கொள்கின்ற நல்லறத்தையும் உன்னிடம் வேண்டுகிறோம். இறைவா! எங்களின் இந்தப் பயணத்தை எங்களுக்கு எளிதாக்கு! இதன் தொலைவை எங்களுக்குச் குறைத்து விடு! இறைவா! நீயே பயணத்தில் தோழனாக இருக்கிறாய். எங்கள் குடும்பத்தை நீயே காக்கிறாய்.இறைவா!இப்பயணத்தின்சிரமத்திலிருந்தும்,மோசமானதோற்றத்திலிருந்தும் செல்வத்திலும் குடும்பத்திலும் தீய விளைவுகள் ஏற்படுவதிலிருந்தும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்.

நூல்: முஸ்லிம்

வேண்டாம் பொய்...!

என்றைக்கும் பொய் இப்படி தான் ஆக்கும் ....


வாத்தியார் வகுப்பில் பாடம் நடத்தி கொண்டிருந்தார். அப்போது பியூன் வந்து 

தலைமை ஆசிரியர் அவரை  அழைப்பதாகக் கூறினார்.

தான் இல்லாதபோது மாணவர்கள் அமைதியாக இருக்க, அவர்களைப் பார்த்து,''நான் வரும் வரை ஆங்கிலப் புத்தகத்தில் பதினைந்தாம் பாடத்தைப் படித்துக் கொண்டிருக்க வேண்டும். வந்ததும் கேட்பேன்'', என்று சொல்லி விட்டு அவர் வெளியே சென்றார்.
சிறிது நேரம் கழித்து வகுப்பறைக்கு வந்து ஒவ்வொரு மாணவராய்ப் பார்த்து ,அவர் சொன்ன பாடத்தைப் படித்தானா என்று கேட்க எல்லோரும் படித்ததாக சொன்னார்கள்.
''
உண்மையிலேயே யாராவது நான் சொன்னதைப் படித்திருந்தால் அந்த பாடம் இருக்கும் பக்கத்தைக் கொண்டு வந்து என்னிடம் காட்ட வேண்டும்,'' என்றார்.
உடனே மாணவர்கள் அனைவரும் பரபரவென்று புத்தகத்தைத் திருப்பினார்கள்.
அப்புத்தகத்தில் மொத்தமே பதினான்கு பாடங்கள் தான் இருந்தன.

வியாழன், 13 மார்ச், 2014

இப்னு அப்பாஸ்(ரலி) அறிவாற்றல்

ஆச்சரியமான கேள்விகளும்...!
அருமையான பதில்களும்...!


ரோமாபுரியின் சக்கரவர்த்தி கைஸர், அமீர் முஆவியா [ரலி] அவர்களுக்கு ஒரு கடிதம் அனுப்பி, அதில் கீழ்காணும் கேள்விகளுக்கு பதில் வேண்டியிருந்தார்.
1, கிப்லா இல்லாத பகுதி எது ?
2, தந்தை இல்லாதவர் யார் ?
3, குடும்ப பாரம்பரியமில்லாதவர் யார் ?
4, ஒருவரை அவருடைய கப்று கொண்டு நடந்தது அவர் யார் ?
5, கருவறையில் படைக்கப்படாத மூன்று வஸ்துக்கள் எவை ?
6, மூன்று பொருள் :- ஒன்று முழுமையானது. இன்னொன்று அரைகுறையானது. மற்றொன்று ஒன்றுமே இல்லாத வஸ்து. இவை யாவை ?
7, உலகிலுள்ள எல்லாப் பொருளின் வித்தையும் ஒரு பாட்டிலில் போட்டு எனக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
இவ்வாறு கேள்விகள் அடங்கிய இக்கடிதத்தை அமீர் முஆவியா [ரலி] அவர்கள், அப்துல்லாஹ் பின் அப்பாஸ் [ரலி] அவர்களுக்கு அனுப்பினார்கள்.
அருமை நாயகம் [ஸல்] அவர்களால் திருக்குர்ஆனின் விஷய ஞானத்தையும் மார்க்கத்தின் சட்ட ஞானத்தையும் யா அல்லாஹ்! இவருக்கு கற்றுக்கொடு” [புகாரி : 75,143] என விஷேசமாக துஆ செய்யப்பட்டவரும் திருக்குர்ஆன் விரிவுரையாளர்களின் தலைவர் என பிரபலமாக அறியப்பட்டவருமான பேரறிஞர் இப்னு அப்பாஸ் [ரலி] அவர்கள் மேற்படி கடிதத்திற்கு அளித்த பதில்கள் வருமாறு :-
1, கிப்லா இல்லாத பகுதி கண்ணியம் வாய்ந்த கஃபாவின் உள்பாகமாகும்.

2,தந்தை இல்லாதவர்,ரூஹுல்லாஹ் ஈஸா நபி [அலை] அவர்களாகும்.

3, குடும்ப பாரம்பரியமில்லாதவர், பாவா ஆதம் [அலை] அவர்களாகும்.
4, கப்று கொண்டு நடந்தது, ஹள்ரத் யூனுஸ் [அலை] அவர்களாகும்.

5, கருவரையில் வைத்து படைக்கப்படாத மூன்று வஸ்துக்களாவன ;
[1] நபி இஸ்மாயீல் [அலை] அவர்களுக்குப் பகரமாக குர்பானி கொடுப்பதற்காக நபி இப்ராஹீம் [அலை] அவர்களுக்கு வழங்கப்பட்ட ஆடு.
[2] கற்பாறையிலிருந்து வெளிவந்த சாலிஹ் நபி [அலை] அவர்களின் அதி அற்புத ஒட்டகம்.

[3] மூஸா [அலை] அவர்களின் பாம்பு.


6, சுய புத்தி உள்ளவர் முழுமையானவர். சொல் புத்தி மட்டும் உடையவர் அரைகுறையானவர்.சொல் புத்தியும் இல்லை. சுய புத்தியும் இல்லை. இவர் தான் ஒன்றுமே இல்லாத வஸ்து.
7.பின்னர், ஹள்ரத் அப்துல்லாஹ் பின் அப்பாஸ் [ரலி] அவர்கள் ஒரு பாட்டிலில் நீரை நிரப்பி இது தான் எல்லா பொருளின் மூல வித்துஎன பதிலளித்தார்கள்.



இஸ்திகாரா தொழுகை...!


வெற்றியின் இரகசியம் இஸ்திகாரா தொழுகை!

ஒரு  வாலிபன் ஒரு பெண்னை  திருமணம் செய்வதற்காக வேண்டி இஸ்திகாரா தொழுகையை தொழுகின்றான்பின்னர் திருமணத்துக்காக    தயாராகின்றான்அப்போது     அவனது சகோதரன்  அப்பெண்னை  திருமணம்  முடிப்பதை விட்டும் அவனைத் தடுக்கின்றான். வேறு குடும்பத்தில் பெண் பார்க்க வேண்டுகிறான்.  அந்த வாலிபனோ, தான் பார்த்த பெண்னை மணம் முடிப்பதற்காக தனது சகோதரனை  கவரும் வகையில் பல முயற்சிகளை மேற்கொள்கிறான்ஆனால் அனைத்து முயற்சிகளும்  பயனளிக்கவில்லை.  இறுதியில்  வேறொரு பெண்னை மணக்கின்றான்.  குறிப்பிட்ட சில நாட்களுக்குப் பின்னர் அவ்வாலிபனுக்கு முதலாவது திருமணம்  பேசப்பட்ட அப்பெண் மரணிக்கின்றாள். தற்போது அவனுக்கு தான் தொழுத அந்த இஸ்திஹாரா தொழுகையில் முழுமையான திருப்தி ஏற்பட்டதோடு தன்னை தடுத்த தனது சகோதரனின் விருப்பமின்மை அவனுக்கு நல்லதாக அமைந்தது.

ஒரு வாலிபன் தொழிற்சாலை ஒன்றில் காலை மாலை என இரண்டு நேரங்களிலும் வேலை பார்த்து வந்தான்ஆனால் அவனது சம்பளமோ தனது அடிப்படைத் தேவையைக்கூட நிறைவேற்ற  போதாது; அல்லாஹ் அவனுக்கு நேரான வழியைக் காட்டினான்அல்- குர்ஆன் மனனப்பிரிவில் சேர்ந்தான்அத்தோடு பள்ளியில் நடக்கக்கூடிய மார்க்க வகுப்புக்களிலும், மார்க்க சொற்பொழிவுகளிலும் தவறாமல் கலந்து கொள்பவனாக இருந்தான். என்றாலும் அவனது தொழிலோ அதற்குத் தடையாகவே இருந்து வந்தது. இதனால், தான் மனைவி மக்களுடன் வீட்டில் இருப்பதற்கும் வீட்டின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றுவதற்கும்  மிக மிக குறைவாகவே  அவனுக்கு நேரம் கிடைத்தது.
ஒரு நாள் அறிஞர் ஒருவரிடம் சென்று, தனது கஷ்டத்தை, முறைப்பாட்டை முன் வைக்கின்றான்.  அவர் சில அறிவுரைகளைக் கூறினார். அன்றிலிருந்து அந்த வேலையை வெறுத்தவனாக  தான் அல்-குர்ஆனையும் கற்று, மார்க்க வகுப்புக்களிலும் கலந்துக் கொள்ள வேண்டும் என்ற நோக்கோடு வேறொரு வேலையை தேடுகிறான். ஆனாலும் எங்கு தான் செல்ல? பின்னர் மார்க்க அறிஞர் அவனை பார்த்துநன்மையை, தனது தேவையை வேண்டி தொழும்  தொழுகையைப் பற்றி (இஸ்திகாரா தொழுகை) தெரியுமா? என்று கேட்க, அவன் தெரியாது என்று கூறினான். பின்னர் அதனை கற்றுக் கொடுத்தார். அவன் உடனே இஸ்திகாரா தொழுகையைத் தொழுதுவிட்டு இறைவன் பால் நம்பிக்கை வைத்தவனாக பிரார்திக்கின்றான். பின்னர் முயற்ச்சி செய்து ஒரு வேலையை பெற்றுக் கொள்கின்றான்.
சிறிது காலத்துக்குப் பிறகு மார்க்க அறிஞரிடம் மகிழ்ச்சியுடன் சநதோஷமான நிலையில்  சென்று கூறினான். அல்லாஹ் எனது கஷ்டத்தை நீக்கினான்குறைந்த நேரத்தில் அதிக சம்பளத்தை பெறக்கூடிய ஒரு தொழிலைப் பெற்றுக் கொண்டேன்; இதன் மூலம் மார்க்க வகுப்புக்களிலும், தனது மனைவி மக்களுடனும்  இருப்பதற்கு மிக மிக வசதியாக இருப்பதாக கூறினான்.
இதனது இரகசியம் தான் என்ன? இவர்களது வெற்றிக்கு காரணமாக அமைந்தது எது? இதுதான் இஸ்திகாரா தொழுகையின் இரகசியம்.

ஒரு மனிதன் அல்லாஹ்விடம் இஸ்திகாரா தேடுவது அவன் பெற்ற பாக்கியமாகும் என நபி ஸல் அவர்கள் கூறினார்கள்.


குர்ஆனுடைய சூராவை எங்களுக்கு கற்றுத்தருவது போல எங்கள் காரியங்க  ளில் இஸ்திகாரா செய்யும் நடைமுறையையும் நபி ஸல் அவர்கள் எங்களுக்கு கற்றுத்தந்தார்கள்.
இமாம்  புகாரி ரஹ் அவர்கள் கூறுகிறார்கள்.
நான் என்னுடைய (ஜாமிஃ புகாரி) நூலில் ஒவ்வொரு ஹதீஸை பதிவு செய்யும் முன்னர் அல்லாஹ்விடம் இஸ்திகாரா செய்து இரு இரக்கஅத் தொழுவேன் என்று கூறுகிறார்கள்.

எனவே இஸ்திகாரா தெழுவோம் ...!
நன்மையை அடைவேம்...!