செவ்வாய், 6 ஆகஸ்ட், 2013

பணிவு உயர்வு

பனிந்தால் உயர்வாய்


மன் தவாலஅ ரஃபஅஹீல்லாஹ்  வ மன் தகப்பர வல அஹீல்லாஹ் அரபியின் முதல் எழுத்து அலிஃப்பாக இருக்கும் போது ?
பிஸ்மில்லாஹ்வில் ஏன் அல்லாஹ் பா வை முதலில் கொண்டு வந்தான் ?
அலிஃப் தன்னை நிமிர்த்தி நிற்கின்றது  ஆனால் பா தன்னை தாழ்த்தி பனிந்து இருக்கிறது . அனைத்து விஷயத்திற்கும் அடிப்படையாக ஆரம்பமாக இருப்பது பிஸ்மி
மலைமேல் ஒருவன் ஏறும் போது  குனிந்து தான் ஏற வேண்டும்  ஆனால் இறங்கும் போது நிமிர்ந்து தான் இறங்க  வேண்டும் 
அல்லாஹ் இங்கு நமக்கு சொல்ல வருவது அனைத்திற்கும் அடிப்படை பனிவு தான்.
  ஆறு விஷயம் இதற்கு உதாரணம்
முதல் விஷயம்

நூஹ் (அலைஅவர்களின் கப்பல் ஒதுங்கிய ஜீத்மலை

அல்லாஹ் அனைத்து மலைகளுக்கும் வஹி அறிவித்தான் எனதுநபியின் கப்பல் உங்களில் ஒருமலையின் மீது ஒதுங்கும். அனைத்து பெரிய மலைகளும் தன் மீது தான் நபியின் கப்பல் ஒதுங்கும் என்று பெருமை அடித்துக் கொண்டது .ஆனால் ஜீத் மலை மட்டும் தன்னை தாழ்வாக கருதி மிகப்பெரிய மலைகலெல்லாம் உள்ளது நாமோ சிறிய மலையென்று தன்னை கருதியது எனவே இறைவன் அந்த மலைக்கு உன்னத தன்மையை கொடுத்தான்

விஷயம் :2
மூஸா(அலை)இறைவனிடம் பேச சென்ற துர்ஸினா மலை
இந்த சமயமும் அல்லாஹ் எல்லா மலைகளுக்கும் வஹி அறிவித்தான் எல்லா மலைகளும் பெருமை கொண்டது துர்ஸினா மலை மட்டும் தன்னை தாழ்த்தி பனிவாக்கியது அல்லாஹ்வுக்கு இது விருப்பமானது அதைத்தான் (துர்ஸினாமலை) மூஸா நபியோடு பேச தேர்த்தெடுத்தான் அந்த துர்ஸினா மலையை பரிசுத்தமான இடம் என்று அல்லாஹ் கூறுகிறான்
விஷயம் : 3
யுனுஸ்(அலை) அவர்கள் 40 நாட்கள் தங்கிஇருந்த மீன்
அல்லாஹ் எல்லா மீன்களுக்கும் வஹி அறிவித்தான் எனது நபி யுனுஸ்(அலை)  உங்களில் ஒருவரின் வயிற்றில் வருவார்  என்றான் உடனே
எல்லா மீன்களுக்கும்  தனது  வயிற்றில் வருவார்  என்று எண்ணியது
ஆனால் யுனுஸ்(அலை)  அவர்களை விளுங்கிய மீன் மட்டும் தன்னை பனிவாக கருதியது எனவே அல்லாஹ் அதற்கு அந்த வாய்ப்பை வழங்கினான்.

விஷயம் : 4
தேனி அல்லாஹ் எல்லா பறவைகளுக்கும் வஹி அறிவித்தான்: உங்களில் ஒரு பறவை இனத்தின் வயிற்றில் இருந்து மாறுபட்ட பல வண்ணங்களில் ஒரு குடி பானம் வெளியாகும் அது மனிதர்களுக்கு நோய் நிவாரணியாகும்.
உடனே எல்லா பறவைகளும் தன் வயிற்றில்தான் அந்த பானம் உறுவாகும் என்று நினைத்தது ஆனால் சிறிதாக இருந்த தேனி மட்டும்  தன்னுடைய வயிற்றில் இருந்தா வரபோகுது என்று நினைத்தது நானே சின்ன பறவை
என்று எண்ணியது  எனவே அல்லாஹ் அதன் வயிற்றில் தேனை வைத்தான் அதன் மூலம் மனிதனுக்கு சுகத்தை வைத்தான்.
விஷயம் 5
இறைவனுக்கு அடிபனியும் ஸீஜீது இது எந்த மதத்திலும் இல்லாத ஒன்று. ஒரு மனிதன் தன்னை முழுவதுமாக இறைவனுக்கு பனிந்து விடும்போது அது அல்லாஹ்வுக்கு மிக  விருப்பமாகி விடுகிறது.அதனால்தான் தொழுகையில் அனைத்து ருக்னையும் ஒருமுறை வைத்த இறைவன் ஸீஜீதை மட்டும் இரண்டு தடவை வைத்தான்

விஷயம் :6
உயிரினும் மேலான உத்தம நபிகள் நாயகம் (ஸல்)
ஸஹாபாக்கள் நபி (ஸல்) அவர்களிடம் கேட்டார்கள் யா ரசூதால்லாஹ் நபி இப்ராஹீம்(அலை) அவரகளை அல்லாஹ் தன் நேசரா(கலீலுல்லாஹ்வா)க தேர்ந்தெடுத்தான். மூஸா (அலை)அவர்களை தன்னிடம் பேசிய கலீமுல்லாஹ் தேர்ந்தெடுத்தான். ஈஸா (அலை)அவர்களை தனது ரூஹீல்லாஹ் வாக  தேர்ந்தெடுத்தான். தங்களை அல்லாஹ் எவ்வாறு வைத்துள்ளான் ?
அதற்கு நபி (ஸல்) அவர்கள் நான் அப்துல்லாஹ்(அல்லாஹ்வின் அடிமை) என்று பதிலளித்தார்கள் எனவே அல்லாஹ் அவர்களை அனைத்து நபிமார்களைவிடவும் உயர்த்தினான் தனது பிரியத்திற்குரிய (ஹபீபுல்லாஹ்வாக) தேர்ந்தெடுத்தான். எனவே யார் தன்னை பனிந்த நடக்கிறார்களோ அவர்களை அல்லாஹ் உயர்த்துவான்.
      பணிவோம் உயர்வோம்


வெள்ளி, 2 ஆகஸ்ட், 2013

இதயம் மறந்த பத்து விஷயங்கள்

ஒரு நாள் இப்ராஹீம் இப்னு அத்ஹம் (ரலி) அவர்களிடம் ஒருவர் வந்து

அல்லாஹ் குர்ஆனில் நீங்கள் என்னிடம் கேளுங்கள் நான் பதிலளிக்கிறேன்

என்று கூறுகின்றான் ஆனால் நான் அல்லாஹ்விடம் பல தடவை கேட்டு

விட்டேன் எனக்கு ஏதும் தரவில்லை என்று அவர் கூறினார்

இப்ராஹீம் இப்னு அத்ஹம் (ரலி)  அவருக்கு பதிலளித்தார்கள்

நீங்கள் இறைவனிடம் கேட்கிறீர்கள் ஆனால் உங்களின்

இதயம்  10 விஷயத்தை மறந்து விட்டது

1.இறைவனின் கட்டளைகளை அறிந்தும் சிறம் சாய்ப்பது இல்லை

2.குர்ஆனை ஓதுகிறீர்கள் அதன் படி நடப்பது இல்லை

3.ஷைத்தான் பகைவன் என அறிந்தும் அவனை விடுவதில்லை

4.நபி (ஸல்)அவர்கள்  மீது அன்பு வைக்கிறீர்கள் ஆனால் அவர்களின் 
வழிமுறைகளை பின்பற்றுவதில்லை

5.சொர்கத்தை நேசிக்கிறீர்கள் ஆனால் அதற்கு தேவையான அமல்களை செய்வது இல்லை 

6.நரகை பயப்படுகிறீர்கள் ஆனால் பாவத்தை தவிர்ப்பது இல்லை

7.மரணம் நிச்சயம் என அறிந்தும் நல் அமல் செய்வது இல்லை

8.அடுத்தவனின் குறைகளை ஆராய்கிறீர்கள் தங்களின் குறைகளை மறந்து விடுகிறீர்கள்

9.இறைவனின் உணவை உண்கிறீர்கள் ஆனால் அவனுக்கு நன்றி
 தெரிவிப்பது இல்லை

10.மரணமானவர்களை அடக்கம் செய்கிறீர்கள் ஆனால் படிப்பினை பெறுவதில்லை

இவைகளை சரிபடுத்தி இறைவனிடம் கேட்டால் கண்டிப்பாக அல்லாஹ் தருவான் என   இப்ராஹீம் இப்னு அத்ஹம் (ரலி) கூறினார்கள்.

குர்ஆன் பற்றி அறிவோம்

குர்ஆனில் அல்லாஹ் கூறும்


வரலாறு           பற்றி கூறும் வசனங்கள் =  1000

உவமைகள்    பற்றி கூறும் வசனங்கள்   =1000

வக்குரிதிகள்  பற்றி கூறும் வசனங்கள்   =1000

எச்சரிக்கை     பற்றி கூறும் வசனங்கள்   =1000

இறை ஏவல்    பற்றி கூறும் வசனங்கள்   =1000

விலக்கல்         பற்றி கூறும் வசனங்கள்   =1000

ஹலால்&
ஹராம்             பற்றி கூறும் வசனங்கள்     =500

துஆ                   பற்றி கூறும்  வசனங்கள்     =100

மற்ற   வசனங்கள்                                                =66

மொத்த வசனங்கள்                         =6666



வியாழன், 1 ஆகஸ்ட், 2013

பிரியமான மூன்று விஷயங்கள்

கலீஃபா உமர் (ரலி)அவர்கள் ஒரு தடவை நபி (ஸல்) அவர்களுடனும் மற்ற கலீஃபாகளுடனும்  சேர்ந்து  உட்கார்ந்து இருந்தபோது


நபி(ஸல்)கூறினார்கள்

உலகில் எனக்கு மூன்று விஷயம் பிரியமானது
1.நறுமணம்
2.நற்குணமுள்ள பெண்
3.என் கண்களுக்கு குளிர்ச்சி தரும் தொழுகை


அபு பக்கர் (ரலி) கூறினார்கள்

உலகில் எனக்கும் மூன்று விஷயம் பிரியமானது
1.நபி(ஸல்)அவர்களின் முகத்தை பார்த்து கொண்டே இருப்பது
2.எனது செல்வத்தை இஸலாத்திற்காக செலவு செய்வது
3.எனது மகள் நபி(ஸல்) அவர்களுக்கு மனைவியாக இருப்பது

உமர்(ரலி) கூறினார்கள்

உலகில் எனக்கும் மூன்று விஷயம் பிரியமானது
1.நன்மையை ஏவுவது
2.தீமையை தடுப்பது
3.பழைய ஆடைகளை அணிவது

உஸ்மான்(ரலி) கூறினார்கள்
உலகில் எனக்கும் மூன்று விஷயம் பிரியமானது
1.பசித்தவர்களுக்கு உணவளிப்பது
2.ஆடைஇல்லாதவர்களுக்கு ஆடை அணிவிப்பது
3.குர்ஆனை எப்போதும் ஓதிக்கொண்டே இருப்பது


அலி(ரலி) கூறினார்கள்
உலகில் எனக்கும் மூன்று விஷயம் பிரியமானது
1.விருந்தினரை உபசரிப்பது
2.வெய்யில் காலத்திலும் நோன்பு வைப்பது
3.இஸ்லாத்தின் எதிரிகளிடம் போர் புரிவது


நபிமார்களும் அவர்கள் செய்த வேலையும்


1.நபி ஆதம்(அலை) அவர்கள் - விவசாயம்

2.நபி இப்ராஹீம்(அலை) அவர்கள்- விவசாயம்

3.நபி லூத்(அலை) அவர்கள் - விவசாயம்

4.நபி யஸஃ (அலை) அவர்கள் - விவசாயம்


5.நபி ஸாலிஹ் (அலை) அவர்கள்- வியாபாரம்

6.நபி ஹாரூன்(அலை)அவர்கள் - வியாபாரம்


7.நபி நூஹ்(அலை) அவர்கள்- தச்சுத் தொழில்


8.நபி ஜக்கரிய்யா(அலை) அவர்கள் -தச்சுத் தொழில்


9.நபி இஸ்மாயீல் (அலை) அவர்கள் - வேட்டையாடுதல்

10.நபி யஃகூப்(அலை) அவர்கள்-ஆடு மேய்த்தல் 

11.நபி ஷுஐப்(அலை) அவர்கள் - ஆடு மேய்த்தல்

12.நபி மூசா(அலை) அவர்கள் - ஆடு மேய்த்தல

13.நபி லுக்மான்(அலை) அவர்கள் - ஆடு மேய்த்தல்

14.நபி (ஸல்) அவர்கள்- ஆடு மேய்த்தல்

புறத்தை புறம் தள்ளுவோம்

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்


* பெரும்பாவியை குறித்து புறம் பேசுவது குற்றமாகாது. தான் மறைவாக செய்கின்ற பாவங்களை வெளியில் சொல்பவனைக் குறித்துப் புறம் பேசுவது குற்றமாகாது.


* மனைவியைத் திருப்திப்படுத்துவதற்காகப் பொய் சொல்லுங்கள். போர்க்களத்தில் எதிரியை (தந்திரத்தால்) வெல்வதற்காகப் பொய் சொல்லுங்கள்.

* அல்லாஹ்வுக்கு மிக பிரியத்திற்குரிய தலம் பள்ளிவாசலாகும். அவனுக்கு மிக மிக வெறுப்புக்குஉரிய இடம் கடைவீதியாகும்.

* சொர்க்கம் வேண்டுமா? விருப்பம் கொண்டவர் பெற்றோர்களைச் சந்தோஷப்படுத்துங்கள்.

* உங்களுடைய குற்றங்குறைகளைப் போக்கிக் கொள்ளாத நிலையில் மற்றவர்களுடைய குற்றங்களைக் குறித்துப் பேசாதீர்கள்.


* நீங்கள் இரவில் அதிகமாக தூங்காதீர்கள். ஏனென்றால், அதிகமாகத் தூங்கினால் கியாமநாளில் ஏழையாக எழுப்பப்படுவீர்கள்.


* மதுபானம் அருந்துவது பாவங்கள் அனைத்திற்கும் தாயாகும். மது அருந்துபவன் தொழுகையை விட்டுவிடுவான்.

நிச்சயம் மரணம் வரும் நீ ஒரு நாள் இறந்திடுவாய்





அல்லாஹ் கூறுகிறான்


* ஒவ்வொரு மனிதனும் மரணத்தை சுவைக்க வேண்டியவன் ஆவான். நீங்கள் அனைவரும் உங்களின் கூலியை மறுமை நாளில்தான் முழுமையாக பெறுவீர்கள். (3:185)

* எங்கிருந்தாலும் மரணம் உங்களிடம் வந்தே தீரும் -- நீங்கள் உறுதிமிக்க கோட்டைகளில் இருந்தாலும் சரி.(4:78)

* தீனுக்காக --இறை நெறிக்காக நீங்கள் தாயகத்தை துறக்க நேரிடும்போது மரணத்துக்கு அஞ்சி அதை கை விட்டு விடாதீர்கள்.(4:197)

*மரண வேளை வந்துவிட்டால் வானவர்கள் உயிரைக் கைபற்றுகிறார்கள் .அதில் அவர்கள் எந்த குறையும் வைப்பதில்லை.(6:61)

* இறைவனை எதிர்த்து போரிடும் மக்களின் உயிர்களை வானவர்கள் கடுமையான முறையில் கைபற்று கிறார்கள்.(6:93)

* இறைவனை மறுப்பவர்கள் ,மரணத்தின்போது இறை மறுப்பின் பாதிப்பை உணர்ந்து கொள்வார்கள்.(7:37)

* இறை நிராகரிப்பவர்களின் உயிர் பிரியும்போது வானவர்கள் அவர்களை வேதனைபடுத்துவார்கள்.(8:50)

*இறைவனுக்கு கீழ்ப்படியாமல் வரம்பு மீறி நடப்பவர்கள் ,மரணத்தின் போது நாங்கள் எந்த குற்றமும் செய்யவில்லையே என்று கூறி சமாளிக்க பார்ப்பார்கள்.(16:28)

சிரிப்பின் வகைகள்

ஓயாமல் சிரிப்பவன்    கிறுக்கன்

ஓட விட்டு சிரிப்பவன் வஞ்சகன்

இருக்குமிடமெல்லாம் சிரிப்பவன் கோமாளி

இருப்பதைத் தவற விட்டுச் சிரிப்பவன் ஏமாளி

தெரியாது என்று சிரிப்பவன் பசப்பாளி

தெரியுமென்று சிரிப்பவன் நடிப்பாளி

தோல்வியிலே சிரிப்பவன் வீரன்

துன்பத்திலே சிரிப்பவன் மனிதன்

நீ சிரிப்பதால் பலர் அழுவார்கள் என்றால் 

நீ சிரிப்பதை விட்டு விடு

நீ அழுவதால் பலர் சிரிப்பார்கள் என்றால் அதற்காக

நீ அழு

குர்ஆனில்  அல்லாஹ் கூறுகின்றான் 

குறைவாக சிரியுங்கள்  அதிகமாக அழுவுங்கள் (9.82)

நல்ல நண்பனின் அடையாளம் நாண்கு

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்

1.அவனைப்பார்த்தால் அல்லாஹ்வின் நியாபகம் வரும்.

2.அவனுடன் பேசினால் ஈமான் அதிகரிக்கும்.

3.அவனுடன் உட்ர்கார்ந்தால் அறிவு வளரும்.

4.அவனுடைய செயல்கள் மறுமையை நினைவு படுத்தும்.
   
           நுால் திர்மிதி .2144

எட்டைப்பேணி உயர்வை எட்டு

1.தொழுகையில் உள்ளத்தைப்பேணிக்கொள் !

2.சாப்பிடும் போது உணவில் தொண்டையைப்பேணிக்கொள் !

3.சபையில் நாவைப்பேணிக்கொள் !

4.விருந்தினர் வீட்டில் கண்களைப்பேணிக்கொள் !

       இரண்டை மறந்து விடதே

5.எந்த நிலையிலும் அல்லஹ்வை மறந்து விடாதே!

6.மரணம் வந்தே தீரும் என்று மறந்து விடாதே !

         இரண்டை மறந்து விடு

7.நீ பிறருக்கு செய்த உபகாரத்தை மறந்து விடு !

8.பிறர் உனக்கு செய்த துன்பத்தை மறந்து விடு !



லுக்மான் (அலை) தனது மகனுக்கு செய்த உபதேசம்

மண்ணறை மர்மம்

மண்ணறை மர்மம்


உஸ்மான் (ரலி) அவர்கள் மண்ணறைக்கு அருகில் நின்றால் தாடி நனைகின்ற அளவு அழுவார்கள்.” சொர்க்கம் , நரகத்தைப் பற்றி கூறப்படும் போது தாங்கள் அழுவதில்லை . ஆனால் மண்ணறையைப் பார்த்தால் அழுகிறீர்களே ஏன் ? ” என்று அவர்களிடத்தில் வினவப்பட்டது. அதற்கு அவர்கள் கூறினார்கள். ” மண்ணறைதான் மறுமையின் நிலைகளில் முதல் நிலையாகும் . இதில் ஒருவன் வென்று விட்டால் இதற்குப் பின் உள்ள நிலை இதை விட இலகுவானதாக இருக்கும். இதில் ஒருவன் வெற்றி பெறா விட்டால் இதற்குப் பின் உள்ள நிலைமை இதை விடக் கடுமையானதாக இருக்கும். நான் கண்ட காட்சிகளிலேயே மண்ணறை தான் மிகக் கோரமான இருந்தது ” என்று அல்லாஹ்வின் தூதர் ( ஸல்) அவர்கள் கூறியிருக்கிறார்கள். ( ” எனவே தான் மண்ணறையைப் பார்த்தால் அழுகிறேன் ” என்று உஸ்மான்(ரலி) அவர்கள் கூறினார்கள்.)

அறிவிப்பவர் : ஹானிஃ (ரஹ்)

நூல்: திர்மிதி 2230

ஹதீஸ்

நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள்: 

யார் லைலத்துல் கத்ர் இரவில் நம்பிக்கையுடனும் நன்மையை எதிர்பார்த்தும் வணங்குகிறாரோ, அவரது முன் பாவம் மன்னிக்கப்படுகின்றது. யார் ரமழானில் நம்பிக்கையுடனும் நன்மையை எதிர்பார்த்தும் நோன்பு நோற்கிறாரோ அவரது முந்தைய பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன.

ஹழ்ரத் அபூஹுரைரா (ரலியல்லாஹு அன்ஹு) - ஸஹிஹுல் புகாரி 1901

ஹதீஸ்

நபி( ஸல் ) அவர்கள் கூறினார்கள்
சன்மார்க்க விளக்கமுள்ள ஒரு மகர்க்க அறிஞர் (மார்க்க விளக்கம் இல்லாமல் வணங்கும் ) ஆயிரம் வணக்கசாலிகளை விட ஷைத்தானுக்கு கடுமையானவர்.
அறிவிப்பாளர்  இப்னு அப்பாஸ் (ரலி)
நுால் திர்மிதி

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்