பாத்ரூமில் துஆ ஓதலாமா ?
ஹாஜியார் அஸ்ஸலாமு அலைக்கும்.
நான் இமாம் பேசறேன்.
வ அலைக்குமுஸ்ஸலாம்
வரஹ் .
சொல்லுங்க இமாம்
உங்களை சந்திக்க வரலாமா…?
என்ன விஷயமா…?
உள்ளாட்சித் தேர்தல்
சம்பந்தமா.கொஞ்சம் ஆலோசனை செய்யனும்.
நாளைக்குப்பார்கலாம்.
இன்னிக்கு வெளியுரில இருக்கிறேன். அப்படியா? எங்க இருக்கீங்க..?கன்னியாகுமரியில
!
அங்க என்ன விஷேசம்?சந்தோஷம் முடிச்சிட்டு
வாங்க .பேசிக்கலாம்.இமாம். எனக்கொரு சந்தேகம்
.கேளுங்க.
இங்க புது வீட்டில
கழிப்பறை குளிப்பறை இரண்டையும் சேர்த்து கட்டியிருக்காங்க.
அங்கதான் ஒளு செய்ய
வேண்டியுள்ளது. ஒளு செய்துட்டு துஆவை உள்ளே வச்சி ஓதலாமா?
”உள்ளே வச்சி ஓதக்கூடாது. நுழைவதற்கு முன் பிஸ்மி துஆக்களை ஓதி விட்டு உள்ளே சென்று ஓளு செய்துவிட்டு
வெளியே வந்து மற்ற மற்றுமுள்ள துஆக்களை ஓத வேண்டும்.
(ரத்துல் முக்தார் பாகம்-1 பக்கம்145)
ரெம்ப நன்றி இமாம் அப்படியே
செய்கிறேன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக