வியாழன், 1 ஆகஸ்ட், 2013

புறத்தை புறம் தள்ளுவோம்

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்


* பெரும்பாவியை குறித்து புறம் பேசுவது குற்றமாகாது. தான் மறைவாக செய்கின்ற பாவங்களை வெளியில் சொல்பவனைக் குறித்துப் புறம் பேசுவது குற்றமாகாது.


* மனைவியைத் திருப்திப்படுத்துவதற்காகப் பொய் சொல்லுங்கள். போர்க்களத்தில் எதிரியை (தந்திரத்தால்) வெல்வதற்காகப் பொய் சொல்லுங்கள்.

* அல்லாஹ்வுக்கு மிக பிரியத்திற்குரிய தலம் பள்ளிவாசலாகும். அவனுக்கு மிக மிக வெறுப்புக்குஉரிய இடம் கடைவீதியாகும்.

* சொர்க்கம் வேண்டுமா? விருப்பம் கொண்டவர் பெற்றோர்களைச் சந்தோஷப்படுத்துங்கள்.

* உங்களுடைய குற்றங்குறைகளைப் போக்கிக் கொள்ளாத நிலையில் மற்றவர்களுடைய குற்றங்களைக் குறித்துப் பேசாதீர்கள்.


* நீங்கள் இரவில் அதிகமாக தூங்காதீர்கள். ஏனென்றால், அதிகமாகத் தூங்கினால் கியாமநாளில் ஏழையாக எழுப்பப்படுவீர்கள்.


* மதுபானம் அருந்துவது பாவங்கள் அனைத்திற்கும் தாயாகும். மது அருந்துபவன் தொழுகையை விட்டுவிடுவான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக