மறுமை நாளில்
ஒரு தோழர் நபி இடம் வருகை தந்து சொன்னார்.
நாயகமே எனது அடிமைகள் என்னிடம் பொய் கூறுகின்றனர் .
எனது பொருளில் மோசடி செய்கின்றனர்.
எனக்கு மாறு செய்கின்றனர்.
எனவே அவர்களை நான் திட்டுகின்றேன் அடிக்கின்றேன் நான் இவர்களுடன் இவ்வாறு நடந்து கொள்வதால் மறுமையில் எனது நிலை எப்படி இருக்கும் என்று கேட்டார் அப்பொழுது பெருமானார் சொன்னார்கள் .
மறுமையில் உன் விசயத்தில் அவர்களின் மோசடிகளும் மாறுதல்களும் . பொய்களும் இத்துடன் அவர்களுக்கு நீ கொடுத்த தண்டனைகளும் அளந்து பார்க்கப்படும்.
அப்பொழுது அவர்களின் பாவங்களும் உனது தண்டனைகளும் சமநிலையில் இருந்தால் அது உனக்கு சாதகமும் அல்ல பாதகமும் அல்ல. அவர்களின் பாவங்களை விடவும் உனது தண்டனை குறைவாக இருக்குமானால் அது உனக்கு சிறப்பு சேர்க்கும்.
அவர்களின் பாவங்களை விட உனது தண்டனை அதிகமாக இருக்குமானால் அவர்களுக்காக உன்னை பழி வாங்கப்படும் என்றார்கள் இதை கேட்ட அம்மனிதர் அழுது விட்டார்.
அப்பொழுது நபி அவர்கள்
கியாமத் நாளுக்காக நீதியான தராசுகளை நிறுவுவோம். எவருக்கும் சிறிதளவும் அநீதி இழைக்கப்படாது. ஒரு கடுகு விதை அளவே இருந்த போதும் அதையும் கொண்டு வருவோம். கணக்கெடுக்க நாமே போதும்.
(அல்குர்ஆன் 21:47)
இந்த வசனத்தை நீங்கள் ஓத வில்லையா? என்று கேட்டார்கள் நாயகமே அவர்களை நான் பிரிவது தான் எனக்கும் அவர்களுக்கும் நலமாகும் எனவே அவர்கள் அனைவரையும் உரிமை விட்டதற்கு நான் உங்களை சாட்சியாக்குகின்றேன் என்று கூறி விடுதலை செய்துவிட்டார்.
நூல்;மிஸ்காத்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக