திங்கள், 14 நவம்பர், 2016

ஒரு இரவில் எப்படி சாத்தியம்...?


நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்

தனது மருமகன் ஹழ்ரத் அலி ரழியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு உபதேசம் செய்தார்கள்

அலியே ஐந்து விசயத்தை தினமும் செய்யாமல் உறங்க வேண்டாம்..

1} முழு குர்ஆனை ஓதாமல் உறங்காதே

2} தினமும் 4000 தீனார்கள் தர்மம் செய்யாமல் உறங்க வேண்டாம்

3} கஃபதுல்லாஹ்வை தவாபு செய்யாமல் உறங்காதே

4} சுவர்க்கத்தில் உனது இடத்தை பாதுகாக்காமல் உறங்காதே

5} உனது எதிரியை ( இச்சை ) கொல்லாமல் உறங்காதே..

அதற்கு ஹழ்ரத் அலி ரழியல்லாஹு அன்ஹு .

நாயகமே அனைத்தும் ஒரு இரவில் எப்படி சாத்தியம் என கேட்க...

நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னார்கள் ..

1} குல்ஹூவல்லாஹூ சூராவை 3 முறை ஓதினால் குர்ஆன் முழுவதும் ஓதிய நன்மை கிடைக்கும்

2} சூரத்துல் பாத்திஹாவை 4 முறை ஓதினால் 4000 தீனார்கள் தர்மம் செய்த நன்மை பெறுவீர்

3} நான்காம் கலிமாவை 10 முறை ஓதினால் கஃபாவை தவாபு செய்த நன்மை பெறுவீர்

4} லாஹவ்ல வலா குவ்வத்த இல்லா பில்லாஹில் அலிய்யில் அளீம் என்று 10 முறை ஓதினால் சுவனத்தில் உமது இடத்தை பாதுகாத்த நன்மையை பெறுவீர்

5} அஸ்தக்கபிருல்லாஹில் அளீம் வ அதூபு இலைஹி என 10 முறை ஓதினால் உமது எதிரியை கொன்றதற்கு சமம் என கூறினார்கள்....


இன்ஷா அல்லாஹ் நாமும் ஓதி நன்மை பெறுவோம்....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக