நாம் எப்போது அனுசரித்து போக வேண்டும்...!
தவளையும்
மனிதனும்...
சூழ்நிலைக்கு ஏற்ப மாறக் கூடிய சக்தி மனிதனுக்கும்தவளைக்கும் ஒரே மாதிரி தான் இருக்கிறது.
ஒரு தவளையை பிடித்து தண்ணீரில் போட்டு
கொதிக்கவையுங்கள்,தண்ணீரின்
வெப்பம் அதிகரிக்கும்போதுதவளை தன் உடலை அந்த வெப்ப நிலைக்கு ஏற்பமாற்றி கொண்டே வரும்.வெப்பம் ஏற ஏறதவளையும் அந்த வெப்பநிலைக்கு ஏற்ப தன் உடலை அந்தவெப்பத்துக்கு ஏற்ப மாற்றி கொள்ளும்.
தண்ணீர் கொதிநிலையை அடையும்போது வெப்பத்தை தாங்கமுடியாமல்தவளை பாத்திரத்தில் இருந்து வெளியே குதிக்கமுயற்சி செய்யும்.ஆனால்,எவ்வளவு முயற்சி செய்தாலும் தவளையால்வெளியேற முடியாது. ஏன் என்றால்வெப்பத்துக்கு ஏற்ப தன்உடலை மாற்றி கொண்டே வந்ததால்அது வலுவிழந்து போய் இருக்கும். சிறிது நேரத்தில் அந்ததவளை இறந்துவிடும்.
எது அந்த தவளையை கொன்றது ?
பெரும்பாலானோர் கொதிக்கும் நீர் தான்அந்ததவளையை கொன்றது என்று சொல்வீர்கள்.
ஆனால் உண்மை என்னவென்றால்,எப்போது தப்பித்து வெளியேற வேண்டும் என்று சரியாகமுடிவெடுக்காத அந்த தவளையின் இயலாமை தான்அதை கொன்றது.
நாமும் அப்படித்தான் எல்லோரிடமும் சூழ்நிலைக்கு ஏற்பஅனுசரித்து போகிறோம்.ஆனால் நாம் எப்போது அனுசரித்து போகவேண்டும், எப்போது
எதிர்கொள்ள வேண்டும்என்பதை தெரிந்து வைத்திருக்க வேண்டும்.
மனரீதியாக,உடல்ரீதியாக,பணரீதியாக மற்றவர்கள்நம்மை நசுக்க ஆரம்பிக்கும்போது நாமும் சுதாரிக்காமல்போனால் மீண்டும் அதையே தொடர்ச்சியாகசெய்ய ஆரம்பிப்பர்.உடலில் வலிமை இருக்கும்போதே அவர்களிடமிருந்து தப்பித்துவிடுதல் நன்று.
நாம் அனுமதித்தால் ஒழிய நம்மை அழிக்க எவராலும்முடியாது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக